Connect with us

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் ; யார் யார் தெரியுமா ?

Startup

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் ; யார் யார் தெரியுமா ?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமயத்தில் கூட நம் இந்தியர்கள் உலகின் பணக்கார்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தற்போது போர்ப்ஸ் நிறுவனம், இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, அதில் முகேஷ் அம்பானியும், அதானியின் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

முகேஷ் அம்பானி

   

Mukesh ambani

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான அம்பானி, முதலாம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்துமதிப்பு, 11 ஆயிரத்து 600 கோடி. தற்போது நடைபெற்ற இவர் மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கே 100 கோடி வரை செலவு செய்துள்ளார் அம்பானி.

கவுதம் அதானி

Gautam adani

இப்போது ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி, உள்கட்டமைப்பு மற்றும் பண்டங்களின் கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கிறார். இவரின் சொத்துமதிப்பு 8400 கோடி.

சிவ நாடார்

Shiv nadar

HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனர் ஷிவ் நாடார். இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர். அவரது சொத்துக்களை 22 சதவீதம் அதிகரித்துள்ளன. ஃபோர்ப்ஸ் படி, அவர் சொத்துக்களின் நிகர மதிப்பு 3690 கோடி.

சாவித்ரி ஜிண்டல்

Savitri-jindal

OP ஜிண்டால் குழுமத்தின் எஃகு மற்றும் சக்தி நிறுவனமான சாவித்ரியின் நிகர சொத்து மதிப்பு 3350 கோடி மற்றும் உலக அளவில் 91வது இடத்தில் உள்ளது. முதல் 10 பணக்கார இந்தியர்களில் உள்ள ஒரே பெண் இவர் தான்.

திலீப் ஷங்கவி

Dilip Shanghvi

உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்குப் பின்னால், உலகில் 115 வது இடத்தில் இருப்பவர் ஷாங்வி. இவரது சொத்து மதிப்பு 2670 கோடி.

ஷைரஸ் பூனவளா

Cyrus poonawalla

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்குப் பின்னால் இருந்தவர், பூனவாலா. தனது சொத்துமதிப்பை இருமடங்காக உயர்த்தியுள்ளார்.இவரின் சொத்துமதிப்பு 2130 கோடி.

குஷால் பால் சிங்

Kushal pal singh

இந்தியாவின் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் நிறுவனமான DLF-ஐ தனது அசாத்திய முயற்சிகளாலும், பழம்பெரும் யோசனைகளாலும் வெற்றிகரமாகக் கட்டி எழுப்பியவர் குஷால் பால் சிங். இவரின் சொத்துமதிப்பு 2090 கோடி.

குமார் மங்களம் பிர்லா

Kumar Mangalam Birla

பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராகவும், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் வேந்தராகவும் உள்ளார் குமார் மங்களம் பிர்லா.இவரின் சொத்துமதிப்பு 1970 கோடி.

ராதாகிஷன் தமனி

Radhakishan damani

நாடு முழுவதும் டி-மார்ட்களை இயக்கும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்களை நிறுவியுள்ள ராதாகிஷன் தமனியின் சொத்துமதிப்பு 1760 கோடி ஆகும்.

லட்சுமி மிட்டல்

Lakshmi mittal

உலகின் மிகப்பெரிய எஃகு மற்றும் சுரங்க உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டலின் தலைவர் லட்சுமி மிட்டல். இவன் சொத்துமதிப்பு 1640 கோடி.

author avatar
Deepika

More in Startup

To Top