Connect with us

Tamizhanmedia.net

அன்று : வேலை கிடைக்கவே கஷ்டம் ; இன்று : 800 கோடி வருமானம் ஈட்டும் கம்பெனியின் ஓனர்…. லண்டனில் சாதித்த இந்திய பெண்

Startup

அன்று : வேலை கிடைக்கவே கஷ்டம் ; இன்று : 800 கோடி வருமானம் ஈட்டும் கம்பெனியின் ஓனர்…. லண்டனில் சாதித்த இந்திய பெண்

சில நேரங்களில் வாழ்க்கை நாம் நினைத்தது போல இருக்காது, நாம் எதிர்பாராத பல திருப்பங்களை கொண்டதே வாழ்க்கை. நம் தாய் மண்ணில் சாதிக்க முடியாமல் வெளிநாடு சென்று சாதித்த இந்தியர்கள் பலர் உள்ளனர் அதில் முக்கியமானவர் இந்தியாவை சேர்ந்த பூனம் குப்தா.

Poonam gupta

   

இந்தியாவில் உள்ள டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் பூனம் குப்தா. ஸ்கூல் டெல்லியில் முடித்த இவர் காலேஜில் பிசினஸ் மேனேஜ்மண்ட் படித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு புனி குப்தாவை திருமணம் செய்த பூனம் கணவரின் வேலையால் ஸ்காட்லாந்து செல்கிறார். நாம் படித்த படிப்பு எங்கேயும் வேலை கிடைக்கும் என நபியிருந்த பூனமிற்கு அங்கு எந்த கம்பெனியில் வேலை கிடைக்கவில்லை. இதுதான் அவர்க்கு விழுந்த முதல் ஆடி.

Poonam gupta

ஆனால் இந்த அடியால் தான் அவர் பறக்க கற்று கொள்கிறார். 2003 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அரசாங்கத்திடம் ஒரு லட்சம் பெற்று பேப்பர் ரீசைக்கிள் கம்பெனியை தொடங்குகிறார். இதை தொடங்கிய ஆறு மாதத்தில் அவரின் கணவரும் அவருடன் இணைந்து கொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கம்பெனியை வளர்க்கிறார். கிட்டத்தட்ட 53 நாடுகளுக்கு பேப்பர்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறார்.

PG paper poonam gupta

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல், கடும் முயற்சியால் இவரின் பி.ஜி. பேப்பர் கம்பெனியை பெரிய கம்பெனியாக உருமாற்றினார். இன்று இந்த கம்பெனியில் 350 பேர் வேலை செய்கின்றனர். இந்த் கம்பெனியின் இன்றைய மதிப்பு 800 கோடி ஆகும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து இன்று ஸ்காட்லாந்தில் சொந்தமாக தொழில் செய்து பெரிய ளவில் இருக்கிறார் நம் இந்தியாவை சேர்ந்த பூனம் குப்தா.

 

author avatar
Deepika

More in Startup

To Top