Connect with us

65,000 கோடிக்கு சொந்தக்காரர்…. அம்பானி குடும்பத்துடன் பழக்கம்…. யார் இந்த ஹர்ஷ் ஜெயின்

Startup

65,000 கோடிக்கு சொந்தக்காரர்…. அம்பானி குடும்பத்துடன் பழக்கம்…. யார் இந்த ஹர்ஷ் ஜெயின்

ஸ்போர்ட்ஸ் என்றாலே இந்தியர்களுக்கு இஷ்டம் தான். அதிலும் பாண்டஸி ஸ்போர்ட்ஸ் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆம், ரியல் பிளேயர்களை வைத்து ஆன்லைனில் விளையாடும் ஸ்போர்ட்ஸ் தான் பாண்டஸி ஸ்போர்ட்ஸ். ட்ரீம் 11 என்ற ஆப் மூலம் இது செயல்பாட்டில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு இது செயல்பாட்டுக்கு வந்தது, ஆனால் அதற்கு முன்பு கிட்டத்தட்ட 150 கம்பெனிகள் இந்த ஐடியாவை ரிஜெக்ட் செய்துள்ளன. இதை உருவாக்கியவர் ஹர்ஷ் ஜெயின். அம்பானிக்கு நெருக்கமான இவர் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Dream 11 founder Harsh jain

ஹர்ஷ் ஜெயின், ஆனந்த் ஜெயினின் மகன் ஆவார். இந்த ஆனந்த் ஜெயின் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர், முகேஷ் தன்னுடைய இரண்டாவது அண்ணன் என்றே குறிப்பிட்டுள்ளார் ஆனந்த் ஜெயின். இப்படிப்பட்ட பின்புலத்தில் பிறந்தவர் தான் ஹர்ஷ் ஜெயின். மும்பையில் பிறந்த இவர், லண்டனில் உள்ள செவனோக்ஸ் பள்ளியில் தன பள்ளி படிப்பை முடித்துள்ளார். அதன்பின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், எம்.பி.ஏ முடித்துள்ளார்.

   

Harsh jain and bhavith sheth

 

மைக்ரோசாப்டில் இன்டர்ன் செய்யும்போது தான் பாண்டஸி ஸ்போர்ட்ஸ் மீது இவருக்கு ஆர்வம் வந்துள்ளது. 2008, ஆம் ஆண்டு ஹர்ஷ் தன்னுடைய நண்பன் பவித்துடன் சேர்ந்து இதை உருவாக்கி உள்ளார். வருடங்கள் ஓட ஓட இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2014 ஆம் இதை 10 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர். 2018 நான்கு கோடிக்கு அதிகமானோர் இதை பயன்படுத்தி உள்ளனர். இந்த ட்ரீம் 11 கம்பெனியின் இன்றைய மதிப்பு 65,000 கோடி.

Harsh jain family

ஹர்ஷ் ஜெயின், அர்ச்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். முகேஷ் அம்பானியின் வீட்டு பக்கத்தில் கிட்டத்தட்ட 75 கோடிக்கு இவர் வீடு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Deepika
Continue Reading
To Top