TRENDING
சென்னை ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை…. காண குவிந்த ஒட்டுமொத்த திரை பிரபலங்கள்…. வைரலாகும் புகைப்படங்கள்…
2023 ஆம் ஆண்டின் 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது மிக பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனை ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகிறார்கள்.
இந்த வருடம் ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் இருந்தே அபாரமாக தங்களின் ஆட்டத்திறமையை ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே,மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் உள்ளிட்ட அணிகள் வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த போட்டி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டி நடைபெறும் போதும் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று போட்டியை கண்டு களிக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.
அதன்படி நேற்று சிஎஸ்கே அணி மற்றும் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலின்,மகன் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்புமணி மகேஷ் ஆகியோருடன் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை கண்டு ரசித்தார். அது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் சிஎஸ்கே ஜெர்சியை அணிந்து வந்திருந்தார்.
அதனைப் போலவே புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆர்வத்துடன் போட்டியை கண்டு ரசித்தார்.
நடிகர் தனுஷ், அஜித்தின் மனைவி ஷாலினி, மகன் மகள், நடிகை பிரியங்கா மோகன், நடிகர் சதீஷ், வெங்கட் பிரபு, நாக சைதன்யா, இயக்குனர் மோகன் ஜி மற்றும் சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குவிந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் சிஎஸ்கே அணிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தற்போதைய போட்டியில் சிஎஸ்கே அணி முதல் 5 போட்டிகளில் மூன்று வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
தற்போது பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.