Connect with us

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

TRENDING

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சிக்கு ஆடிஷனுக்கு கலந்து கொண்டவர் கோபி மற்றும் சுதாகர். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப காலத்திலேயே இருவரும் வெளியேற்றப்பட்டன.

பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் என்கின்ற சேனலில் பணியாற்றி வந்த இவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் தங்களுடைய நகைச்சுவை திறமையால் புகழின் உச்சிக்கே சென்றனர். பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் இருந்து விலகிய இவர்கள் பரிதாபங்கள் என்கின்ற புது சேனல் ஒன்றை தொடங்கியிருந்தார்கள்.

   

அதில் திருமண வீடுகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் தேர்வுகள், விவசாயிகளின் பரிதாப நிலமை என அனைத்தையும் விழிப்புணர்வாக காமெடியுடன் கலந்து பேசி வருகிறார்கள். இவர்களுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. நம் வீட்டில் நடப்பது, நாம் தினந்தோறும் சந்திப்பது என அனைத்தையும் காமெடியாக காட்டி வருகிறார்கள். இவர்களது வீடியோ எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

 

அதுமட்டுமில்லாமல் ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு, விஜய்யின் மெர்சல், ஜாம்பி உள்ளிட திரைப்படங்களை சிறு சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தனியாகவே கிரவுட் ஃபண்டிங் மூலம் பணத்தை திரட்டி மணி கம் டுடே கோ டுமாரோ என்கின்ற படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் அப்படம் என்ன ஆனது என்று பலரும் தெரியவில்லை.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதாகர் மற்றும் கோபி பேசியிருந்தார்க.ள் அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: “தங்களுக்கு கிரவுட் ஃபண்டிங் மூலம் பணம் பெறுவதற்கு ஒரு லைசென்ஸ் அத்தாரிட்டி வாங்க வேண்டும் என்பதே தெரியாது. ஆனால் அதை எல்லாம் யோசிக்காமல் நாங்கள் தொடங்கிவிட்டோம். அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

மக்கள் மூலமாக தங்களுக்கு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வந்தது, மீதி அனைத்து ஸ்பான்சர்கள் மூலமாக வந்தது. அதுவும் லாக்டவுன் சமயத்தில் ஸ்பான்சர்கள் அனைவரும் பின்வாங்கிய காரணத்தினால் பணத்தை தங்களால் திரட்ட முடியவில்லை. தற்போது எப்படியாவது அந்த படத்தை முடித்துவிட்டு அதில் எங்களுக்கு லாபம் வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி தங்களுக்கு கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுத்து விட வேண்டும் என்றும் முடிவில் இருக்கின்றோம்.

கொஞ்சம் பணம் பற்றாக்குறையாக இருந்தால் வேலை பார்த்துவிட்டு பணத்தை சேர்த்து மீண்டும் படத்தை இயக்குவோம். இப்படி தான் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அப்படத்தின் நிலைமையால் யாரிடமும் கடன் வாங்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் விஷ்ணு விஜயன் என்பவர் இயக்கி இருக்கிறார்.

நாங்கள் இருவரும் கதாநாயகன் தான். மேலும் இப்படத்தின் மூலம் பல டிப்ரசன்கள் இருந்தது. பலர் தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள். அதை எல்லாம் கண்டுபிடிக்கும் போது மனதளவில் மிகவும் கஷ்டமாக இருந்தது. போன் ரிங் ஆனாலே எனக்கு அலர்ஜியாகி விடும் அப்படி ஒரு சூழ்நிலைக்கு சென்று விட்டோம். நான் ஒருமுறை தற்கொலை முயற்சி செய்து கொண்டேன்” என்று சுதாகர் மற்றும் கோபி பேசி இருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top