இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு…! ‘எதிர்நீச்சல்’ சீரியலில் புது ஆதி குணசேகரனாக களமிறங்கி மிரட்டப்போவது இந்த நடிகரா…?

By Begam on செப்டம்பர் 30, 2023

Spread the love

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை. இதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

   

சமீபத்தில்மாரிமுத்துவுக்கு பதில் தற்போது வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்கபோவதாக தகவல் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு நடிகர் பசுபதி , நடிகர் ராதா ரவி என பலரது பெயரும் அடிபட்டது. இந்நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தி கொடுத்திருக்கும் பேட்டியில் தனக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பது உண்மை தான் என கூறி இருந்தார்.

   

 

ஆனால் தான் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருவதாகவும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது, இன்னும் உறுதியாகவில்லை என கூறியிருந்தார். தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில தினங்களில் ஆதி குணசேகரனாக நாம் வேல ராமமூர்த்தியை எதிர்நீச்சல் சீரியலில் பார்க்க முடியுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.