பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ரவீனா எப்போதும் மாடன் உடையில் வலம் வருவார். ஆனால் தற்போது வித்தியாசமாக புடவை அடைந்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான ரவீனா அதற்கு முன்னதாக பல திரைப்படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.

2018 ஆம் ஆண்டு வெளியான ரட்சகன் திரைப்படத்தின் நடித்தன் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பீட்சா 3 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்றெடுத்த ரவீனா டான்ஸ் மாஸ்டர் மணியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது சிறப்பான நடனம் மூலமாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரவீனா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார் .

எப்போதும் மார்டன் உடையில் வளம் வரும் ரவீனா சற்று வித்தியாசமாக புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இதோ..
