MGR-க்கு பாடல் எழுதவில்லை என்ற கவலை தீர்ந்தது.. ஆனாலும் அதில் ஒரு குறை.. வைரமுத்துவின் வைரல் பதிவு..

By Mahalakshmi on வைகாசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் கடந்த 44 ஆண்டுகளாக மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக எழுத்தாளராக வலம் வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. 70 வயது தாண்டிய போதிலும் தற்போது வரை தனது சிறப்பான பாடல்களால் சிறந்த பாடல் ஆசிரியராக வலம் வருகிறார்.

   

சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு ‘நிழல்கள்’ என்கின்ற திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்கின்ற பாடலை எழுதி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அரை நூற்றாண்டு பயணத்தில் மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக பலம் வந்த இவர் 1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.

   

 

ஏழு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் ஆறு மாநில விருதுகள் என 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கவி தொகுப்பு என மிகப் பெரிய பாராட்டுக்கு உரிய மனிதர் வைரமுத்து. இவர் தமிழில் தற்போது முன்னணி நடிகர்களாக விளங்கும் சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பாடல்களை எழுதி இருக்கின்றார். ஆனால் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பாடல்களை எழுதியதில்லை.

அந்தக் குறையை தற்போது இருக்கும் தொழில்நுட்பம் தீர்த்து விட்டதாக ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “எங்கிருந்தோ எனக்கு ஒரு பாடல் வந்தது. வியந்தும் மகிழ்ந்தும் போனேன். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்ஜிஆர் பானுமதியும் நடித்த புகழ் பெற்ற பாடல் காட்சியோடு நான் எழுதிய பாடல் ஒன்றை பொருத்திருந்தார்கள்.

எம்ஜிஆருக்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தொழில்நுட்பத்தால் தீர்ந்தது. ஆனால் வேறு ஒரு குறை வந்தது. இதை கண்டு களிப்பதற்கு எம்ஜிஆர் பானுமதியும் இல்லையே” என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுடன் சேர்த்து வைரமுத்து வெளியிட்டு இருந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.