அன்று 65 ரூபாய் சம்பளம்.. இன்று 13,000 கோடிக்கு சொந்தக்காரர்.. HATSUN உருவான கதை..

By Deepika

Updated on:

கணக்கு பாடத்தில் பெயிலான காரணத்தா; படிப்பை நிறுத்திய ஒருவர், இன்று 13,000 கோடிக்கு சொந்தக்காரன் ஆன வரலாறை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் என்ன செய்ய போகிறோம், நம்மால் முன்னேற முடியுமா, டிகிரி இல்லாமல் முன்னேற முடியுமா என உங்களின் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தால் நீங்கள் இந்த பதிவை கட்டாயம் படிக்க வேண்டும்.

Hatsun agro

இந்த கதையின் நாயகன் சந்திரமோகன். இவரின் தந்தை சாதாரண மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார், இவரின் குடும்பம் மிக சாதாரணமானது, அதனால் சந்திரமோகனை நன்றாக படிக்க வைத்து அவரை பெரிய பதவியில் அமர்த்தி விட வேண்டும் என கனவு கண்டனர் அவரின் பெற்றோர். ஆனால் கல்லூரியில் கணக்கு பாடத்தில் பெயிலான காரணத்தால் நான் இனி படிக்கவே செல்ல மாட்டேன் என முடிவெடுத்து அவரின் பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

   

1970-ல் தன்னுடைய 21 வயதில் குடும்ப சொத்தை விற்று அதில் வந்த 17,000 ரூபாய் பணத்தை வைத்து சின்னதாக ஒரு ஐஸ்க்ரீம் கடையை துவங்கினார். வெறும் 3 பேருடன் தொடங்கப்பட்ட இந்த கடை ஆரம்பத்தில் பெரும் சவால்களை சந்தித்தது. ஆனால் கடை ஆரம்பித்த ஒரே வருடத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வருமானம் ஈட்டியது.

Chandramohan Arun icecream

இதை அவரை இந்த பிசினஸை தொடர வைத்தது, 1981 ஆம் ஆண்டு சின்ன சின்ன கிராமங்களில் ஐஸ்கிரீம் தட்டுப்பாடு இருப்பதை கண்டறிந்தார் சந்திரமோகன், அதனால் அவர்களுக்கும் ஐஸ்கிரீம் எளிதில் ,கிடைக்க வேண்டும் என பல பிராண்டுகளை அணுகினார், ஆனால் அனைவரும் அவரின் இந்த ஐடியாவை ஒதுக்கினார்கள். அதனால் சந்திரமோகனே அருண் ஐஸ்கிரீம் என்ற பிராண்டை உருவாக்கினார். 1986 ஆம் ஆண்டு அதை ஹேட்சன் அக்ரோ பிராடக்ட் என பெயரை மாற்றினார்.

இன்று இந்தியாவின் மிகப்பெரிய பால் நிறுவனமாக திகழ்கிறது ஹேட்சன். கிட்டத்தட்ட இந்தியாவின் 10,000 கிராமங்களில் இருந்து ஹேட்சன் தங்கள் நிறுவனத்திற்கான பாலை பெறுகிறது. இது மூலம் நான்கு லட்சண விவசாய குடும்பங்கள் வாழ்கின்றனர். ஹேட்சன் நிறுவனத்தின் இன்றைய சொத்துமதிப்பு 20,000 கோடி. சந்திரமோகனின் சொத்து மதிப்பு 13,000 கோடி. ஹேட்சன் பொருட்கள் 42 நாடுகளில் விற்கப்படுகிறது.

Hatsun chandramohan

எதுவும் இல்லாமல் ஆரம்பித்த சந்திரமோகன் இன்று 13,000 கோடிக்கு சொந்தக்காரன் ஆகியுள்ளார். வாழ்க்கையில் நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம், நம்மால் முடியுமா என்பது முக்கியம் இல்லை. நம்மால் முடியும், நீங்களும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த போராடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் சந்திரமோகனின் கதை நிச்சயம் உங்களுக்கு உற்சாகத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

author avatar
Deepika