சவுரி, விக் என்று அழைக்கப்படும் போலி முடிகள் பற்றி நமக்கு நன்றாக தெரியும், இது ஒன்றும் புதிதல்ல காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஒன்று தான். பெரிய பெரிய கோவில்களில் மொட்டையடிக்கும் தளங்கள், மற்றும் பார்லரில் வெட்டப்படும் முடிகளை தான் சவுரி முடிகளாக விற்கின்றனர். இதை 20 வயதாகும் ஒரு பெண் பிசினஸ் ஆகவே மாற்றியுள்ளார், சும்மா இல்லை கிட்டத்தட்ட அது மூலம் 10 கோடி ரூபாய் வருமானமும் பெற்றுள்ளார்.
யார் அந்த பெண், இது எப்படி சாத்தியமானது, பார்க்கலாமா ?
ராஜஸ்தானில் உள்ள அஜ்மேரை பூர்வீகமாக கொண்ட ஷெல்லி என்ற 20 வயது பெண், வெறும் 20 ரூபாய் முதலீட்டில் இந்த பிசினஸை துவங்கி உள்ளார். இப்போது மேல்படிப்பு படித்து வரும் ஷெல்லி இது குறித்து பகிர்ந்துள்ளார். ஜெய்பூர் சென்ற போது 2000 ரூபாய் நல்ல சவுரியை வாங்கியுள்ளார். அதை அணிந்தபின் அவரின் சந்தோசத்திற்கு எல்லையே இல்லை. இதை பிஸினஸாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இந்தியாவில் உள்ள உண்மையான மனித முடிகளை வாங்கி அதை நாம் பொருத்தி கொள்ள ஏற்றவாறு ஹேர் எக்ஸ்டன்ஷன்ஸ் ஆக மாற்றி உறவினருக்கு தந்துள்ளார். அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு இணையதளம் ஆரம்பித்து விற்க ஆரம்பித்துள்ளார். நினைத்ததை விட அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. சென்ற வருடம் இதிலிருந்து கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் ஷெல்லிக்கு வருமானம் கிடைத்துள்ளது.
இப்போது டிமான்ஸ்ட் அதிகமாகி வரும் நேரத்தில் இதை விரிவுபடுத்த ஷெல்லி எண்ணியுள்ளார், இந்த வருடம் 100 கோடி ரூபாய் இது விற்க உள்ளதாக தெரிவித்துள்ளார் ஷெல்லி. இப்படியும் பிசினஸ் செய்யலாமா இதுக்கு இவ்வளவு டிமாண்டா என தோன்றுகிறது அல்லவா ? ஆம், இதுக்கு காரணம், மற்றவர்களை விட இவர் 30 சதவீதம் கம்மியாக விற்பதே இதன் காரணம்.
வெறும் 20 வயதே ஆகும் ஷெல்லி மற்ற பெண்களுக்கு ஓர் அழகான உதாரணம் என்றே சொல்லலாம்.