டிராஃபிக்கை வைத்து ரூட் போட்ட ரேபிடோ! ஜாம்பவான்களுக்கு நடுவே புகுந்து ரவுண்ட் அடித்த வேற லெவல் ஸ்டோரி!

By Arun

Published on:

ஒரு தொழிலில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் தடம் பதித்துவிட்டால் அந்த தொழிலில் புதிதாக அடி எடுத்து வைக்கவே பலரும் யோசிப்பார்கள். ஆனால் ரேபிடோ நிறுவனத்தினர் வேறு மாதிரியாக யோசித்தனர்.

ரேபிடோ நிறுவனத்தை 2015 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் சங்கா, பவன் குண்டுபள்ளி, ரிஷிகேஷ் ஆகிய மூவரும் இணைந்து தொடங்கினார்கள். சென்னை, மும்பை, பெங்களூரு போன்றவை அதிக ஜனத்தொகை கொண்ட மாநகரங்களாக இருக்கிறது. அது போல் வாகன பயன்பாடும் அதிகம். ஆதலால் டிராஃபிக்கிற்கு பெயர் போன ஊர்களாக இருக்கிறது.

   

. இந்த டிராஃபிக்கை அடிப்படையாக வைத்துதான் ரேபிடோ என்ற நிறுவனமே உருவாயிற்று. அதாவது டிராஃபிக்கில் கார், ஆட்டோ  போன்ற வாகனங்கள் விரைந்து செல்வது கடினம். ஆனால் ஒரு பைக்கால் அதனை செய்ய முடியும். சிறிய இடைவெளி இருந்தாலே புகுந்து போய்விடலாம். இதனையே ஐடியாவாக கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் ரேபிடோ.

பைக் டேக்ஸி என்ற ஒன்றை மிகவும் பிரபலப்படுத்தி அதிகளவு வாடிக்கையாளர்களை ஈர்த்தது ரேபிடோ. கட்டணமும் குறைவு என்பதால் ரேபிடோ பைக் டேக்ஸிக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தது. அந்த சமயத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஊபர், ஓலா போன்ற நிறுவனங்கள் திகழ்ந்து வந்தது.

ஆனால் அவர்கள் எல்லாம் கர்நாடகாவில் பெங்களுருவில் கொடிகட்டி பறக்க, ரேபிடோ நிறுவனம் மைசூரில் தனது தடத்தை பதிக்கத் தொடங்கியது. அதன் பின் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ரேபிடோ கொடி பறக்கத்தொடங்கியது. தற்போது இந்தியாவின் பல நகரங்களில் ரேபிடோ பைக் டேக்ஸி செயல்பட்டு வருகிறது. மேலும் 30 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar