ஹெட்லைட்டின் வடிவத்தை மட்டும் மாத்தி பிசினஸை எங்கேயொ கொண்டு போன ஜீப் நிறுவனம்! இது எப்படிப்பா சாத்தியம்?

By Arun on ஏப்ரல் 30, 2024

Spread the love

ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல் முறையான தார் ரோடு இல்லாத மண் ரோடுகளில் கூட எந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம். அதுமட்டுமல்லாமல் மேடான பகுதிகளில் பயணிப்பதற்கு மிகச் சிறந்த வாகனம் ஜீப்தான். இவ்வாறு மண் பாதையிலும் சீராக செல்லும் ஜீப் போன்ற வாகனங்களை SUV கார்கள் என்று அழைப்பார்கள்.

அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்டெல்லண்டிஸ் என்ற நிறுவனம்தான் ஜீப் வாகனத்தை தயாரித்து வருகிறது. 1945 ஆம் ஆண்டு முதல் ஜீப் வாகனத்தை தயாரித்து அதனை சந்தைக்குள் கொண்டு வந்தது அந்நிறுவனம். வாடிக்கையாளர்கள் பலருக்கும் ஜீப்பின் தனித்துவம் பிடித்துப்போக அதன் பின் உலகமெங்கும் அதன் மார்க்கெட் பெரிதளவில் வேலை செய்தது.

   

   

இந்த நிலையில் ஜீப் நிறுவனம் எப்படி அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்தது என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் பரவி வருகிறது. அதாவது முதலில் ஜீப் வாகனத்தில் ஹெட்லைட்டை சதுர வடிவில்தான் வடிவமைத்து வந்தார்களாம். ஆனால் ஒரு கட்டத்தில் ஜீப்பின் மார்க்கெட் பெரிதளவில் சரிந்தது.

 

சரிந்துப்போன மார்க்கெட்டை திரும்ப உயர்த்த என்ன செய்யலாம் என்று ஜீப் நிறுவனம் யோசித்தது. ஏற்கனவே ஜீப்பை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டு அதனை சரிபடுத்தலாம் என அந்நிறுவனம் நினைத்தது. ஆனால் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வேறு மாதிரி யோசித்தாராம்.

அதாவது வாடிக்கையாளர்களிடம் ஜீப்பில் என்ன குறை இருக்கிறது என்று கேட்பதற்குப் பதிலாக ஜீப்பை ஓட்டும்போது எப்படி உணர்கிறீர்கள் என கேட்டாராம். அதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் மலைப்பாதைகளில் ஓட்டும்போது குதிரையில் சவாரி செய்வது போல் இருக்கிறது என கூறினார்களாம். அந்த பதிலை வைத்துக்கொண்டு ஜீப் நிறுவனம் ஜீப்பின் ஹெட்லைட்டை குதிரைக்கு இருக்கும் கண்களைப் போலவே வட்ட வடிவில் மாற்றினார்களாம். அதன் பிறகு ஜீப் மார்க்கெட் வேற லெவலுக்குச் சென்றதாம்.