தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக அறிமுகமான கவின் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலமாக மிகவும் பிரபலமானார். பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின், சாண்டி மாஸ்டர், முகின் என டீமாக இருந்து செய்த ரகளைகள் இன்றளவும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. பின்னர் டாடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றார்.
நடிகர் கவின் தற்போது பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் ஸ்டார் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் பிரஸ்மீட் ஒன்று நடைபெற்றது. இதில் பல கேள்விகளுக்கு நடிகர் கவின் பதில் அளித்திருந்தார். டாடா படத்திற்கு பிறகு ஸ்டார் படத்துக்கு இலன் கதை சொல்ல வந்தார். இந்த கதை எனக்கு தானாக அமைந்தது. இயக்குனர் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ரொம்ப பொறுமை வேண்டும் என்பது போகப் போகத்தான் புரிய வந்தது.
மேலும் கரீனா சோப்ரா தான் இந்த லேடி கெட்டப்புக்கான இன்ஸ்பிரேஷன் என்று கூறியிருந்தார். அதாவது சந்தானம் ஒரு திரைப்படத்தில் லேடி கெட்டபில் நடித்து சூப்பராக அசத்தியிருப்பார். அவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷனாகி தான் இந்த படத்தில் நான் லேடி கெட்டப் போட்டதாக கூறியிருந்தார். மேலும் பலரும் ஐஸ்வர்யா ராஜேஷ் போல் உடையும், அறந்தாங்கி நிஷா போல் பேச்சும் இருப்பதாக கூறி இருந்தார்கள். மூன்றாவதாக ஒன்றைக் கூட கூறி இருந்தார்கள் என மிகவும் கலகலப்பாக பேசியிருந்தார் நடிகர் கவின்.