Connect with us

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

CINEMA

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

 

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த திரைப்படத்தை எட்டு தோட்டாக்கள் படம் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கின்றார் நடிகர் சித்தார்த்.

   

தமிழ் மட்டும் இல்லாமல் பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர் அதிக திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கள் இடத்தை பிடித்திருக்கின்றது. பாலிவுட்டில் ரன் தே பசந்தி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தெலுங்கில் பொம்மரில்லு என்ற திரைப்படத்தால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

நடிப்பு மீதான தனது ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சித்தா. இந்த திரைப்படம் பலரின் இதயங்களை வென்றிருந்தது. இப்போது தன்னுடைய 40 வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவீரன் என்ற வெற்றி படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பு எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த திரைப்படத்தை இயக்குகின்றார்.

இது குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது “உலகம் எங்கிலும் சினிமா பார்வையாளர்களின் இதயங்களை கவரும் வகையில் படங்களை கொடுக்கும் நம் திரை துறையின் இளம் நம்பிக்கையாளர்களுடன் இணைந்து பணி புரிவது மிகுந்த மகிழ்ச்சி. சித்தா படத்தின் மீது நிறைய அன்பு கொடுத்திருந்தனர். பார்வையாளர்களின் உணர்வுகளை ஈர்க்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை சித்தா படம் கொடுத்திருக்கின்றது.

சித்தா படத்திற்கு பிறகு பல கதைகளை நான் கேட்டேன். இருப்பினும் ஸ்ரீ கணேஷ் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சுவாரசியமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற அருண் விஷ்வாவின் தொலைநோக்குப் பார்வை என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் முதன்முறை சந்தித்த போது அவர் தயாரிப்பாளர் என்பதை தாண்டி நல்ல சினிமா மூலம் திரைத்துறையை உயர்த்த வேண்டும் என்கின்ற ஆர்வம் அவரிடத்தில் இருக்கின்றது” என்றார்

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top