தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், லைலா, சினேகா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. டப்பிங் பணிகளில் 50 சதவீதத்தை நிறைவு செய்திருக்கின்றார் நடிகர் விஜய். இதை அடுத்து தளபதி 69 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பொதுவாக நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவரின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால் தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது வரை தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. யார் இயக்கப் போகிறார்? யார் தயாரிக்கப் போகிறார்? யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஆனால் தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கப் போகிறார் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றது. மேலும் டாக்ஸிக் திரைப்படத்தை தயாரித்து வரும் கே வி என் புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறி வருகிறார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அதைத்தொடர்ந்து நடிகை பூஜா ஹேக்டே விஜயுடன் நடிக்க உள்ளதாக கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தால் நடிகை அபர்ணா பால முரளி விஜய்க்கு ஜோடியாக படத்தில் இணையுள்ளதாக கூறுகிறார்கள்.

இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகின்றது. இப்படத்தை முடித்துவிட்டு நடிகர் விஜய் அரசியலில் நுழைய இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியிருக்கும் விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.
