Connect with us

எம்.ஜிஆர் முதல் விஜய் வரை.. இதுவரை அரசியில் கட்சி ஆரம்பித்த நடிகர்களின் லிஸ்ட்.. இதில் வென்றது யார் யார் தெரியுமா..? முழு விவரம்.

CINEMA

எம்.ஜிஆர் முதல் விஜய் வரை.. இதுவரை அரசியில் கட்சி ஆரம்பித்த நடிகர்களின் லிஸ்ட்.. இதில் வென்றது யார் யார் தெரியுமா..? முழு விவரம்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக நடித்து மக்கள் மத்தியில் பெயரும், புகழும் பெற்றுவிட்டால் அவர்களது அடுத்த இலக்கு அரசியல்தான். அப்படி தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ் சினிமாவில் இருந்து சென்று, வென்றவர்கள் குறித்து தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். தமிழ் சினிமா நடிகராக மக்கள் மனங்களை வென்று, இந்த மண்ணை ஆட்சி செய்த நடிகர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

   

முதலில் திமுக ஆதரவாளராக இருந்த அவர், அண்ணாதுரை மறைவுக்கு பிறகு 1972ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கினார். அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் வென்றார். உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே, தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயித்து முதல்வராக தனது ஆட்சியை தொடர்ந்தார்.

நடிகர் திலகமாக மக்கள் மனங்களை கவர்ந்த நடிகர் சிவாஜி கணேசன், தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை 1989ல் துவங்கி, தோற்றுப்போனார். அதே ஆண்டில் எம்ஜிஆரின் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட கே பாக்யராஜ், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் துவங்கி, தோற்றுப் போனார்.

அடுத்து நடிகர் டி ராஜேந்தர் தாயகம் மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை துவங்கி தோற்றுப் போனார். அடுத்து 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை துவங்கி, இன்றுவரை கட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார் சரத்குமார். ஆனால் அவரால் பெரியதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

நடிகர் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை துவக்கினார். அப்படி ஒரு கட்சி இருக்கிறதா, என்பது அவருக்கே சந்தேகம்தான்.நடிகர் கர்ணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். நடிகர் கமல் மக்கள் நீதிமய்யம் கட்சியை துவங்கி விட்டு, ஸ்டாலினிடம் சீட் கேட்டு கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். மன்சூர் அலிகான் துவக்கிய இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இதில் 2005ம் ஆண்டில் கட்சி துவங்கி, எதிர்கட்சி தலைவராக அமரும் அளவுக்கு தமிழக அரசியலில் வெற்றி பெற்றவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு பிறகு தமிழக அரசியலில் மக்களின் வரவேற்பை பெற்ற ஒரே அரசியல் தலைவர் அவர்தான். ஆனால் உடல்நலக்குறைவால் அவர் மறைந்து விட்டார். இப்போது அந்த வரிசையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை துவங்கியிருக்கிறார்.

எம்ஜிஆர் முதல் விஜய் வரை 11 பேர் அரசியல் கட்சி துவங்கியதில், எம்ஜிஆர், விஜயகாந்த் மட்டுமே அரசியலில் சாதித்துள்ளனர். மற்றவர்கள் 8 பேர் தோற்றுப் போயினர் என்பதே உண்மை. இதில் நடிகர் விஜய் ஜெயித்தவர் பக்கமா, தோற்றவர் பக்கமா என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள்.

author avatar
Sumathi

More in CINEMA

To Top