கர்ப்பத்திற்கு பிரசித்திபெற்ற கோவிலில் வழிபாடு நடத்திய தமன்னா.. ஓ.. இது தான் காரணமா..? இணையத்தில் கசிந்த தகவல்..

By Sumathi

Updated on:

நடிகை தமன்னா, தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் நடித்து ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார். தொடர்ந்து வியாபாரி, அயன், சுறா, பையா, தோழா, படிக்காதவன், வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நடிகை தமன்னாவுக்கு, மில்க் ப்யூட்டி என்ற பெயர் உண்டு. தமிழில் நல்ல நடிகையாக ரசிகர்களால் வரவேற்கப்பட்ட தமன்னா, ஒரு கட்டத்துக்கு பிறகு இந்திக்கு போனார். அதன்பிறகு கவர்ச்சியில், அங்குள்ள நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு மாறிவிட்டார்.

   

அதுவும் நடிகர் விஜய் வர்மா என்பவருடன் வெப் சீரிஸ் ஒன்றில் முத்தக்காட்சியிலும், படுக்கையறை காட்சியிலும் மிகவும் நெருக்கமாக நடித்த தமன்னா, அவருடன் டேட்டிங் செல்வது, நைட் பார்ட்டிகளுக்கு செல்வது என, பாலிவுட் நடிகைகளின் கலாசாரத்துக்கு மாறிவிட்டார். பொது இடங்கள், சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரும் தமன்னா, அணிந்திருக்கும் ஆடைகளில் உடலின் அந்தரங்க பாகங்கள் அனைத்துமே வெளிப்படையாக தெரியும் வகையில் இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

சமீபத்தில், ஜெயிலர் படத்தில் காவாலா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னாவை பார்த்து, கல்லூரி படத்தில் நடித்த தமன்னாவா இது, என தமிழ் சினிமா ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர். இந்நிலையில் நடிகை தமன்னா, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாக்யா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வந்திருக்கிறார்.

யோனி வடிவில் அமைந்த இந்த கோவிலில் வழிபாடு நடத்தினால் விரைவில் திருமணம் நல்லபடியாக நடக்கும். விரைவில் கர்ப்பமும் ஏற்பட்டு, நல்லபடியாக குழந்தையும் பிறக்கும் என்பதால், தனது காதலர் விஜய் வர்மாவை திருமணம் செய்யவும், குழந்தை பெறவும், குடும்ப வாழ்வில் செட்டில் ஆகி, இல்லற வாழ்க்கை வாழவும் ஆசைப்பட்டு, காமாக்யா கோவிலுக்கு சென்று வந்திருக்கிறார் நடிகை தமன்னா.

author avatar
Sumathi