இளையராஜா – வாலி காம்போவில் உருவான 5 காதல் பாடல்கள்… இன்றும் பலரது பேவரைட் லிஸ்டில் ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’…

By Divya

Published on:

தமிழ் சினிமாவில் ஒருசில கவிஞர்களின் வரியும், ஒரு சில இசையமைப்பாளர் இசையும் ஒன்று சேர்ந்தால் அந்தப் பாடல் நிச்சயம் வெற்றி பெறும். அப்படியான எவர் கிரீன் காம்போ, வாலி-இளையராஜா காம்போ. அப்படி வாலி எழுத்தில், இளையராஜா இசையில் உருவான சூப்பர் டூப்பர் காதல் பாடல்களை பார்க்கலாம்.

1. ராசைய்யா :

   

1995-ம் ஆண்டு பிரபுதேவா, ரோஜா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ராசைய்யா. யார் கண்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக காதலர்களுக்கான டூயட் பாடலாக அமைந்த ”காதல் வானிலே” பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். இந்தப் பாடலுக்கு வரி எழுதியவர் கவிஞர் வாலி.

2. குரு சிஷ்யன் :

1988-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு உட்பட பலர் நடிப்பில் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படமாக வெளியான படம் குரு சிஷ்யன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற ”கண்டு புடுச்சேன் கண்டு புடுச்சேன்” பாடல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட். காதலில் விழுந்த ஒருவர் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதை வரிகளாய் புட்டு புட்டு வைத்திருந்தார் கவிஞர் வாலி.

3. அரங்கேற்ற வேளை :

1990-ம் ஆண்டு இயக்குநர் பசில் இயக்கத்தில் வெளியான படம் அரங்கேற்ற வேளை. பிரபு, ரேவதி உட்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ”ஆகாய வெண்ணிலாவே” பாடல், காதலர்களுக்கு மிகவும் பிடித்த பாடல். ஒரு காதலன் தனது காதலியை வர்ணிக்கும் விதமாக செதுக்கி இருப்பார் கவிஞர் வாலி.

4. கோபுர வாசலிலே :

1991-ம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான படம் கோபுர வாசலிலே. கார்த்திக், பானுபிரியா உட்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ”காதல் கவிதைகள் படித்திடும் நேரம்” என்ற பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். இப்பாடலுக்கு வரிகள் எழுதியது கவிஞர் வாலி.

5. மாப்பிள்ளை :

1989-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாப்பிள்ளை. இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ரஜினியுடன், அமலா உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில், வாலியின் வரியில் உருவான காதல் பாடலான ”மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே பாடல்”, காதல் துள்ளல் பாடல்.