Connect with us

CINEMA

அன்பே சிவம் படம் ஓடுலன்னதும் அப்ப வருத்தம்… ஆனா இப்ப வரைக்கும் எனக்கு நல்லதுதான் நடக்குது- சுந்தர் சி பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

இதற்கிடையில் அவர் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் சரியாக ஓடாத போது மீண்டும் கலகலப்பு படம் மூலமாக இயக்குனர் ஆனார். அதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார். கடந்த வாரம் அவர் இயக்கத்தில் உருவான அரண்மனை 4 மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

   

சுந்தர் சி இயக்கிய அனைத்துப் படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான். ஆனால் ஒரே ஒரு படம் அவர் நல்ல கதையம்சம் உள்ள மனித உணர்வுகளைப் பேசும் படமாக இயக்கினார். அந்த படம் கமல்ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். அந்த படத்துக்கு கமல்தான் கதை, திரைக்கதை எல்லாம் எழுதியிருந்தார்.

#image_title

அன்பே சிவம் திரைப்படம் வெளியான போது சுத்தமாக ஓடவில்லை. ஆனால் நாளாக நாளாக அந்த படத்தின் மதிப்பு ரசிகர்களுக்கு புரிந்து இப்போது வரை கொண்டாடி வருகின்றார்கள். அன்பே சிவம் திரைப்படம் பற்றி ஒரு மேடையில் பேசிய சுந்தர் சி “இந்த படம் வந்த போது சரியாக ஓடவில்லை. அதனால் நான் வருத்தமாக இருந்தேன். ஆனால் கமல் சார் என்னிடம் ‘நாம ஒரு நல்ல படம் பண்ணிருக்கோம். நமக்கு நல்லதுதான் நடக்கும்” எனக் கூறி நம்பிக்கை அளித்தார்.

அவர் சொன்னது நடந்தது. அந்த படத்தால் எனக்கு இப்போது வரை நல்லதுதான் நடந்திருக்கிறது. அன்பே சிவம் வெளியாகி ஒரு வருடம் கழித்து என் மகளுக்கு சீட் வாங்குவதற்காக ஒரு மிகப்பெரிய பள்ளிக் கூடத்துக்கு சென்றோம். அங்கு கடைசி நேரத்தில் வந்திருக்கீங்க, உங்களுக்கு சீட் கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள்.

இருந்தாலும் பிரின்சிபாலை பார்க்கலாம் என சென்றோம். அவர் ஒரு வட இந்தியர். பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சு சினிமா நோக்கி நகர்ந்தது. அவர் ஏன் இங்கு நல்ல படங்களே வருவதில்லை. இப்போது அன்பே சிவம் என்று ஒரு படம் பார்த்தேன். அதுபோல ஏன் படங்கள் வருவதில்லை என்று கேட்டார். அதைக் கேட்ட என் மனைவி குஷ்பு ‘இவர்தான் அந்த படத்தின் இயக்குனர்’ எனக் கூறினார். அதைக் கேட்டதும் “நீங்களா அந்த படத்தின் இயக்குனர். நான் எப்படி உங்கள் மகளுக்கு சீட் இல்லை என சொல்ல முடியும்’ என சொல்லி சீட் கொடுத்தார்” என நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

 

Continue Reading

More in CINEMA

To Top