உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

By Priya Ram on மே 1, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், கமல், அஜித் ஆகியோருடன் இணைந்து மீனா சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Meena

   

நடிகர் விஜயுடன் இணைந்து யூத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு மட்டும் மீனா நடனம் ஆடியுள்ளார். வேறு எந்த படத்திலும் மீனா விஜயுடன் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்று, சிட்டிசன், வில்லன் ஆகிய படங்களில் மீனா நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜயுடன் இணைந்து தெறி படத்தில் நடித்துள்ளார்.

   

என்னை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும்ல?": மீனாவை சங்கடப்படுத்திய விஜய்

 

அவர் விஜயின் மகளாக தெறி படத்தில் தனது குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சமீபத்தில் மீனா அளித்த பேட்டியில் கூறியதாவது, தெறி படத்தின் ஷூட்டிங் இருக்கும் போது அங்கு சென்றேன். அப்போது விஜய் உங்களுக்கு அஜித்தை தான ரொம்ப பிடிக்கும் அதனாலதான அவர் கூட 3 படம் நடிச்சிட்டீங்க.

ஒரு படத்தில் கூட விஜயுடன் நடிக்காத மீனா….! என்ன காரணம் தெரியுமா….வெளியான சுவாரசிய தகவல் …!!! - Newspetti

என்கூட நடிக்கவே இல்ல என கிண்டலாக கேட்டார். உடனே நான் இல்ல விஜய் அப்போ எனக்கு நிஜமாகவே கால் சீட் இல்ல. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணேன் ஆனா முடியல. அந்த காலகட்டத்தில் ஒரே நாளில் 3 அல்லது 4 படங்களில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு பிஸியாகவே இருந்ததாக விஜயுடன் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனது என மீனா கூறியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.