வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் மூலமாக அதிகம் கவனிக்கப்படும் கதாநாயகியாக மாறி இருக்கிறார் மீனாட்சி சௌத்ரி.
அவுட் ஆப் லவ் என்ற வெப் சீரியஸ் மூலமாக சினிமா துறையில் என்ட்ரி கொடுத்த மீனாட்சி சவுத்ரி மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
விஜய் ஆண்டனியின் கொலை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது தளபதி 68 திரைப்படமான கோட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் .
பேட்மிட்டன் வீராங்கனையாக இருக்கும் மீனாட்சி பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 2017 ஆம் ஆண்டு மிஸ் இமா, 2018 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா உள்ளிட்ட பட்டங்களையும் வென்றிருக்கின்றார்.
மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட மீனாட்சி சாஸ்திரி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.