கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் மகன் சஞ்சய்… வைரலாகும் புகைப்படம்…

By Begam on ஏப்ரல் 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்தது. இதை தொடர்ந்து தற்பொழுது GOAT திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு ஜேசன்  சஞ்சய் என்ற மகன் உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

   

 

   

இவர் சினிமா துறை சார்ந்த படிப்பை படித்தார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது தந்தையைப் போல ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார்.

 

இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம். தற்பொழுது இவர் படம் ஒன்றை இயக்கி வருவதாகவும், அதில் ஹீரோவாக நடிகர் கவின் கமிட்டாக இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் தற்பொழுது கோட் சூட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப்பார்த்த ரசிகர்கள் ‘கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…