Categories: இந்தியா

“மாமியார் செய்த அந்த ஒரு விஷயம்… மனமுடைந்து தூக்கில் தொங்கிய மருமகள்… பெங்களூருவை உலுக்கும் தற்கொலை வழக்கு”..!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தொடர் மோதலால் பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சுஷ்மா (35), பிரபல டெல் (Dell) நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தவர். இவருக்கும் புனீத் குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

கடந்த சில காலமாகவே சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, சுஷ்மாவைச் சமையல் செய்ய விடாமல் மாமியார் தடுத்து வந்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாமியார் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வருவதாகத் தனது பெற்றோரிடமும் சுஷ்மா பலமுறை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான சண்டையால் மிகுந்த மனவேதனை அடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சுஷ்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்காமல் ஒரு மென்பொருள் பொறியாளர் இத்தகைய முடிவை எடுத்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மாமியார் கல்பனாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய சமையல் அறையில் தொடங்கிய ஈகோ மோதல் ஒரு உயிரைப் பறித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

Muthu Mani

Recent Posts

இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…

2 minutes ago

“ஆதரவை விலக்கிக்கிட்டு தாராளமா போங்க…!” கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘மரண மாஸ்’ பதிலடி..! அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…

3 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… குஜராத்தில் பைக்கருக்கு நேர்ந்த பயங்கரம்… மழைநீருக்குள் மறைந்திருந்த எமன்…!

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…

4 minutes ago

“கூட்டணிக்கு குட்பை…? “திமுக தனித்துப் போட்டி…?! ஸ்டாலினின் அதிரடி முடிவு… தமிழக அரசியலில் உடையும் மாபெரும் கூட்டணி…!!”

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…

12 minutes ago

“அடி தாங்க மாட்டீங்க”… சவால் விட்ட மாணிக்கம் தாகூர்… “நீங்க இன்னும் ICU-ல தான் இருக்கீங்க”… கிழித்துத் தொங்கவிட்ட திமுக எழிலரசன்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…

13 minutes ago

BREAKING:பரபரப்பின் உச்சக்கட்டம்… நீதிமன்ற வாசலில் அனிதா ராதாகிருஷ்ணன் வீசிய ‘அரசியல் குண்டு’…6 மணி நேரம் விசாரனைக்கு பின் நடந்த ட்விஸ்ட்…!

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் விவகாரம்…

16 minutes ago