சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, திருமண உறவுகள் மற்றும் குடும்பக் கட்டமைப்புகள் குறித்த ஒரு புதிய விவாதத்தை இணையவாசிகள் மத்தியில் கிளப்பியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் பேசும் குரல் ஏதும் இல்லை; மாறாக, ஒரு பெண் தன் திருமண வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை திரையில் தோன்றும் உரை (Text) வடிவில் பகிர்ந்துள்ளார். சக ஊழியராக அறிமுகமாகி, நட்பாக வளர்ந்து, பின்னர் காதலாக மாறிய தங்களின் திருமண வாழ்க்கையைப் பற்றி அவர் அதில் விவரித்துள்ளார். தங்களுக்கு ஒரு மகன் பிறந்த பிறகு, தான் பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்தில் (Postpartum depression) இருந்த காலகட்டத்தில், தன் கணவர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் (Gay) என்ற உண்மையை தன்னிடம் வெளிப்படுத்தியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் திருப்பத்திற்குப் பிறகு, அவர்கள் தங்களின் உறவை முற்றிலும் முறித்துக் கொள்ளாமல், குழந்தையை ஒன்றாக வளர்க்க முடிவு செய்துள்ளனர். “நாங்கள் தம்பதியராகப் பிரிந்தாலும், ஒரு குடும்பமாக இணைந்தே இருக்கிறோம்” என்று கூறும் அவர்கள், தற்போது ஒரே கூரையின் கீழ், ஆனால் வீட்டின் தனித்தனி பகுதிகளில் வசித்து வருகின்றனர். அந்தப் பெண் தன் மகனுடன் வீட்டின் மேல் தளத்திலும், அவரது கணவர் தனது ஆண் துணையுடன் (Partner) வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வருவதாகக் கூறப்படும் இந்த விசித்திரமான வாழ்க்கை முறைதான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், குழந்தையின் எதிர்காலத்திற்காக இத்தகைய சூழலிலும் அமைதியானதொரு சூழலை உருவாக்கித் தந்த அந்தப் பெண்ணின் மனவலிமையைப் பாராட்டியுள்ளனர். ஆனால், பெரும்பாலானோர் இந்த ஏற்பாட்டின் பின்னால் இருக்கும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களையும், இது குழந்தையை எப்படி பாதிக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். “தன் பாலின அடையாளத்தை மறைத்து, ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து, வாரிசுக்காக அவளது உடலைப் பயன்படுத்திக் கொண்டு, அவள் மன அழுத்தத்தில் இருந்தபோது இப்படி கைவிட்டது அநியாயம்” என்று கணவரின் செயலுக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், அந்தப் பெண்ணின் இந்த முடிவை “சகிப்புத்தன்மை” என்று சொல்வதை ஏற்க முடியாது என்றும், இது “ஏமாளித்தனம்” என்றும் சிலர் விமர்சித்துள்ளனர். “இதற்குப் பெயரே காதலா” என்று குழப்பமடைந்த நெட்டிசன்கள் ஒருபுறமிருக்க, குழந்தையின் பிறப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இவ்வளவு பெரிய புயலைக் கிளப்பியுள்ள இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…