தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை பேர விவகாரம். ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.வான இளையராஜா, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவு தரும்படி தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக சென்னை போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கில் இதுவரை 9 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் பெயர்களைப் பயன்படுத்தி தவெக எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் செந்தில் பாலாஜி தரப்பினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், அதிமுக மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களை இழுக்கப் பின்னணியில் இத்தகைய ரகசியப் பேச்சுவார்த்தைகளும், காய் நகர்த்தல்களும் அரங்கேறியிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
செந்தில் பாலாஜியைச் சுற்றியுள்ள இத்தகைய சர்ச்சைகள் திமுக தலைமைக்கு ஒரு புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது. அதிமுகவில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலம் முதலே அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தன. பின்னர் திமுகவில் இணைந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைகளைக் கவனித்தபோதும் டாஸ்மாக் பார்கள், பாட்டிலுக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்தது எனப் பல புகார்கள் எழுந்தன. தேர்தலுக்குப் பின் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டிய நேரத்தில், செந்தில் பாலாஜியின் பெயரால் உருவாகியுள்ள இந்த புதிய சர்ச்சை திமுகவின் கவனத்தை திசைதிருப்புவதோடு, கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிவாலய வட்டார மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
மறுபுறம், இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான தரப்பினர் தம்மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றவும், தக்கவைக்கவும் பல்வேறு முயற்சிகள் நடப்பது இயல்பானதுதான் என்றும், ஒரு முயற்சி தோல்வியடைவதைச் சதித் திட்டமாகப் பெரிதுபடுத்துவது சரியல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். எது எப்படியோ, தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசப்பட்ட இந்த வழக்கு இன்னும் தீவிர விசாரணையில் இருப்பதால், வரும் நாட்களில் தமிழக அரசியலில் இன்னும் பல அதிரடித் திருப்பங்களும், திமுகவுக்குள்ளேயே பெரிய மாற்றங்களும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…