“டாய்லெட்டில் வந்த 1 மீட்டர் நீள புழு”… மருத்துவர்களையே அலற வைத்த விசித்திர நோய்… மூளையில் இருந்த 38 ஒட்டுண்ணிகள்…. 11 ஆண்டுகள் நரக வேதனையை அனுபவித்த பெண்….!

Spread the love

பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான லோரி டென்மன் என்ற பெண்ணின் இந்தியப் பயணம், அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப்போட்ட ஒரு அதிர்ச்சி கதையாக உருவெடுத்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு மூன்று மாத சுற்றுப்பயணமாக இந்தியா வந்த லோரி, அங்குள்ள உணவகத்தின் கழிவறையைப் பயன்படுத்தியபோது அவரது உடலில் இருந்து ஒரு மீட்டர் நீளமுள்ள நாடாப்புழு வெளியேறியுள்ளது. இதனால் பதறிப்போன அவர் மருத்துவரை நாடியபோது பெரிய பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டதால், அவரும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். ஆனால், அதுவே அவரது வாழ்க்கையின் 11 ஆண்டு கால மருத்துவப் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.

இந்தியா வந்தபோது அசுத்தமான உணவு மற்றும் இறைச்சியைத் தவிர்க்க நினைத்த லோரி, தனக்கே தெரியாமல் நாடாப்புழுவின் முட்டைகள் கலந்த பன்றி இறைச்சியைச் சாப்பிட்டதே இந்தத் தொற்றுக்குக் காரணமாக அமைந்துள்ளது. காலப்போக்கில் அவரது உடல்நிலை மோசமடைந்து, 2011 இல் அவருக்கு முதன்முறையாக வலிப்பு நோய் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில், அவரது மூளையில் லார்வா வடிவில் 38 ஒட்டுண்ணிகள் குடியேறியிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ உலகில் ‘நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்’ (Neurocysticercosis) என்று அழைக்கப்படும் இந்த ஆபத்தான பாதிப்பால், அவருக்குக் கடுமையான தலைவலி, வலிப்பு மற்றும் தீவிர மனநலப் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின.

இந்த ஒட்டுண்ணித் தொற்றால் லோரி தனது வேலையை இழந்து, தந்தையின் பராமரிப்பில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவர்கள் வழங்கிய ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளும் ஸ்டெராய்டுகளும் பலன் தராத நிலையில், ஸ்கேன் பரிசோதனையில் அவரது மூளையில் கடுமையான வீக்கம் இருப்பது உறுதியானது. இதன் விளைவாக அதீத பயம், சித்தப்பிரமை, கவலை போன்ற மனநலப் பிரச்சினைகள் தீவிரமடைந்ததால், நரம்பியல் மனநல மருத்துவமனையில் ஆறு மாதங்கள் தங்கி அவர் தீவிர சிகிச்சை பெற வேண்டியிருந்தது. இறுதியாக, சுமார் 12 ஆண்டுகள் நீண்ட தொடர் சிகிச்சைக்குப் பிறகு, கடந்த 2022 இல் தான் அவர் இந்த கொடிய பாதிப்பில் இருந்து முழுமையாகக் குணமடைந்தார்.

உலகம் முழுவதும் ஏற்படும் வலிப்பு நோய்களுக்கு முக்கியக் காரணியாக விளங்கும் இந்த ‘நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்’ என்பது, ‘டீனியா சோலியம்’ என்ற பன்றி நாடாப்புழுவினால் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு தீவிர பாதிப்பாகும். முறையாகச் சமைக்கப்படாத பன்றி இறைச்சி மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணியின் லார்வாக்கள், ரத்த ஓட்டத்தின் வழியாக மூளையைச் சென்றடைந்து பல வருடங்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் மறைந்திருக்கக் கூடியவை. தொடக்கத்தில் வயிற்று வலி மற்றும் மலத்தில் புழுக்கள் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும் போதே இதைக் கவனித்துச் சிகிச்சை பெறாவிட்டால், அது தசை, கண்கள் மற்றும் மூளைக்குப் பரவி உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதால் விழிப்புணர்வு அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: லஞ்சம் வாங்கிய புஸ்ஸி ஆனந்த்… CM விஜய்க்கு அடுத்த ஷாக்… சற்றுமுன் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…

10 minutes ago

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

38 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

42 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

50 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

51 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

54 minutes ago