இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

Spread the love

தமிழக முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டத்தின்” கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மண்டல கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலம் தகுதியான பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சேவை வரும் ஜூலை மாதம் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 18 மண்டலங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த வீடு தேடி வழங்கும் சேவையானது அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பகுதிகளில் உள்ள 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பயனாளிகளின் இல்லங்களுக்கேச் சென்று நேரடியாக விநியோகம் செய்வார்கள் என சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பாபு தெரிவித்துள்ளார். எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் இந்த நல்வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Visaka

Recent Posts

“பாத்ரூம் போகணும் சார்…” உள்ளே சென்ற கைதி… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ,,,!!

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…

11 minutes ago

“பெண்கள்னு கூட பார்க்கல…” மீன், காய்கறிகளை தூக்கி வீசி தாக்கிய அதிகாரி…. நண்பருடன் சாதி பெயரை சொல்லி ரகளை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…

25 minutes ago

திடீரென கதவைத் திறந்த கணவன்… கள்ளகாதலனுடன் அந்த கோலத்தில் இருந்த மனைவி…. அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி… இறுதியில் நடந்த அதிர்ச்சி சமபவம்…!

திருமண உறவின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள், பல நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கும் குடும்பப் பிரிவுகளுக்கும் வழிவகுக்கின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

அக்டோபர் மாதம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி… தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு…. விஜய்க்கு மறைமுக பிரஷர்….!

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வரும் அக்டோபர் மாதம் சென்னைக்கு வருகை தரவுள்ளார்.…

1 மணத்தியாலம் ago