“திருட வந்தது ஒரு குத்தமாடா”… திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட வினோத தண்டனை… கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!

Spread the love

இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற சூழல்களில் மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு திருடர்களைக் கடுமையாகத் தாக்குவது வழக்கம். ஆனால், இங்குள்ள பொதுமக்கள் வன்முறையைத் தவிர்த்து, சற்றும் எதிர்பாராத ஒரு நூதனமான வழியைக் கையாண்டுள்ளனர். திருடர்கள் தப்பியோடாமல் இருக்க அவர்களை அடிக்காமல், ஆரஞ்சு நிற டக்ட் டேப்பைக் கொண்டு தலை முதல் கால் வரை அசைய முடியாதபடி ‘மமி’ போல முழுமையாகச் சுற்றிப் பிணைத்துள்ளனர்.

இதில் உச்சக்கட்ட சுவாரஸ்யம் என்னவென்றால், சும்மா கட்டிப்போடாமல் அந்தத் திருடர்களின் தலைப்பகுதியில் கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல டேப்பால் வினோதமான காதுகளை வடிவமைத்துள்ளனர். இதனால் அவர்கள் பார்ப்பதற்குப் புகழ்பெற்ற ‘டெலிடப்பீஸ்’ கார்ட்டூன் போலவும், எகிப்திய மமிகள் போலவும் காட்சியளித்துள்ளனர். இந்த விசித்திரமான தண்டனைக் காட்சி அடங்கிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களைச் சிரிப்பலைகளில் ஆழ்த்தியதோடு உலகளவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், “திருடர்களை அடித்துத் துன்புறுத்தாமல், சட்டத்தைக் கையில் எடுக்காமல் பாதுகாப்பாகக் கட்டிப்போட்ட பொதுமக்களின் ஐடியா சூப்பர்” என்று பாராட்டி வருகின்றனர். ஆனால், மறுதரப்பினரோ, “அவர்கள் திருடர்களாகவே இருந்தாலும் பொதுவெளியில் இப்படி அவமானப்படுத்துவது மனித உரிமை மீறல்; இது சட்டப்படி தவறு” என்று தங்களது எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ, இந்தோனேசியத் திருடர்களின் இந்த ‘கார்ட்டூன் அவதாரம்’ தற்போது இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

SATHISH R

Recent Posts

“யாராவது காப்பாத்துங்க… ஏரியில் கேட்ட அலறல் சத்தம்”…. ஓடிச்சென்று உயிரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியன்….. வேடந்தாங்கல் ஏரியில் நடந்த நிஜ த்ரில்லர் சம்பவம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…

10 minutes ago

“புதுசா வந்தவங்களுக்கு சீட்டா?… தொண்டர்கள் என்ன லூசா?”…. “கூட்டணியில இருந்துகிட்டே இப்படி ஒரு குண்டா?”… CM விஜய்யை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம்….!

அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…

18 minutes ago

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

24 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

26 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

34 minutes ago