கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா ஆர்யபு மேர்லாவைச் சேர்ந்தவர் கார்த்திக் சுவர்ண மேர்லா (27). இவர் அப்பகுதி இந்து ஜாக்ரன் வேதிகா அமைப்பின் தாலுகா பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2019 செப்டம்பர் 3-ஆம் தேதி இரவு, சம்ப்யா போலிஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி பந்தலில் யக்ஷகான நாடகக் கலை நிகழ்ச்சியைக் கார்த்திக் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, பழைய நிதித் தகராறு காரணமாக அங்கு வந்த பிரீதேஷ் ஷெட்டி, கிரண் ராய் மற்றும் சரண் ராஜ் ராய் ஆகியோர் கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில், கிரண் ராயும் சரண் ராஜும் கார்த்திக்கின் கைகளைப் பிடித்துக் கொள்ள, பிரீதேஷ் ஷெட்டி கூர்மையான கத்தியால் கார்த்திக்கின் நெஞ்சில் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த புத்தூரின் 5-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சதானந்த நாகப்பா நாயக், குற்றம் சாட்டப்பட்ட பிரீதேஷ் ஷெட்டி மற்றும் கிரண் ராய் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அபராதத் தொகையிலிருந்து ரூ.5.90 லட்சத்தைக் கொல்லப்பட்ட கார்த்திக்கின் தாயார் ஹேமாவதிக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…
அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…