ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ரிலையன்ஸ், கிரீன்கோ, கியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்புகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகியும் புதிதாக எந்தத் தொழில் முதலீடுகளையும் ஈர்க்கவில்லை என அவர் விமர்சித்துள்ளார். முந்தைய திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசு தங்களது சாதனையாகக் கணக்குக் காட்டுவதாகவும், ஆட்சியாளர்கள் தங்கள் எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பதிலேயே மும்முரமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, ஆந்திராவைப் போலத் தொழில் சூழலை மேம்படுத்திப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளார். எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…