தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் செல்வப்பெருந்தகைக்கு பதிலாக காங்கிரஸ் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர், “காங்கிரஸை விமர்சித்தால் திருப்பி அடிப்போம்” என்று திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் எழிலரசன், “கடந்த 1967ஆம் ஆண்டே பேரறிஞர் அண்ணா அடித்த அடியில் காங்கிரஸ் நாக்-அவுட் ஆகிவிட்டது; இன்னும் அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. ஐசியூவில் இருந்த காங்கிரஸை திமுகதான் இத்தனை காலம் காப்பாற்றிப் பொது வார்டுக்குக் கொண்டு வந்தது” என மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், விசிகவின் ஆதவ் அர்ஜுனா முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தது குறித்துப் பேசிய எழிலரசன், மக்கள் மனங்களில் வாழும் முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை மு.க.ஸ்டாலின் தான் ஆள்வார் என்று திட்டவட்டமாகக் கூறினார். இதே வேளையில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் சில அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தவெக பெண் நிர்வாகி கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, அம்பாசமுத்திரம், கரூர், மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளின் இடைத்தேர்தல்களை மனதில் வைத்தே அனிதா ராதாகிருஷ்ணனை அவசர அவசரமாகக் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே மணி நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளதையும், கரூர் இடைத்தேர்தலை ஒட்டி செந்தில் பாலாஜியும் குறிவைக்கப்படுவதையும் எழிலரசன் சுட்டிக்காட்டியுள்ளார். “நாங்கள் அடிக்கும் அடி தாங்க மாட்டீர்கள்” என்று மாணிக்கம் தாகூர் சவால் விட்ட நிலையில், திமுக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த “ஐசியூ” விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடுமையான விமர்சனத்திற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து அடுத்து என்ன மாதிரியான எதிர்வினை வரப்போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழக அரசியல் உலகமும் உற்று நோக்கி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…