மூச்சுத் திணறலால் திடீர்  மரணமடைந்த ‘அஞ்சாதே’ பட நடிகர்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….

By Begam on பிப்ரவரி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்களை கடந்த வருடத்தில் இழந்து விட்டோம். இதைத்தொடர்ந்து இந்த வருடதத்தின் ஆரம்பித்திலேயே இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

#image_title

இதைத்தொடர்ந்து தற்பொழுது ‘அஞ்சாதே’ படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீதரின் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை நெஞ்சங்களை உலுக்கி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2008ல் வெளிவந்த சூப்பர்  ஹிட்  திரைப்படம் தான் அஞ்சாதே.

   
   

 

இந்த படத்தில் நடிகர் நரேன் ஹீரோவாகவும் பல முன்னணி நடிகர்களும் நடித்த்துள்ளனர். இயக்குனர் மிஷ்கினின் திரைவாழ்க்கையில் இத்திரைப்படம் மிகமுக்கிய  திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தில் கால் ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானவர் தான் நடிகர் ஸ்ரீதர். இத்திரைப்படத்தில் தன் கண் முன்னே மகனை போலீசார் சுட்டுக் கொல்லும் போது அவரது நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.

இத்திரைப்படம் மட்டுமின்றி ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்திலும் ஸ்ரீதர் நடித்திருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஸ்ரீதர், இன்று அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். தற்பொழுது இத்தகவல் மொத்த திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது  ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.