மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்த்.. திடீரென உயிரிழந்தது எப்படி..?

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோவாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952 இல் பிறந்தவர். நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். சிறு வயது முதல் சினிமா மீது இருந்த ஆதிக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு  வரை மட்டுமே படித்தார்.

Vijayakanth
Vijayakanth

1979 -ல் எம் ஏ காஜாவின் இயக்கத்தில் வெளியான ‘இனிக்கும் இளமை ‘படத்தின் மூலம் தனது தனது திரை பயணத்தை தொடங்கியவர் கேப்டன். விஜயராஜ் என்ற தனது பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். இதைத்தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடி முழக்கம், அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், சிவப்பு மல்லி என பல வெற்றி படங்களை கொடுத்து தமிழின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார்.

   
Vijayakanth
Vijayakanth

கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 1984ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமா துறையில் ஒரு வரலாற்று சாதனை புரிந்தார். இதை தொடர்ந்து 1999ல் நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல வருடங்களாக இருந்த நடிகர் சங்க கடனை  சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார்.

Vijayakanth

மேலும் நலிவடைந்த கலைஞர்களுக்கு பல உதவிகளும் செய்தார். இது மட்டும் இன்றி 2000 ஆண்டு தனக்கென ஒரு தனி ரசிகர் மன்றத்தை உருவாக்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து 2005இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் .தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி இவர் செய்த சாதனைகள் ஏராளம். சமீப காலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஏற்கனவே ஒரு தடவை மருத்துவமனை சென்று பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில்  கேப்டன் விஜயகாந்த் மறைந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.