ஆன்லைனில் கழுதை பாலை விற்று லட்சங்களில் சம்பாதிக்கும் இளைஞர்.. யார் இந்த திரன் சோலாங்கி..?

By Mahalakshmi

Published on:

ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து சம்பாதிப்பதை தாண்டி சொந்தமாக தொழில் தொடங்கி அதில் கஷ்டப்பட்டு முன்னேற்றம் கண்ட பல நபர்களின் கதைகளை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு இளைஞரின் கதை தான் இது. குஜராத்தை சேர்ந்த இளைஞர் தொழில் தொடங்கி மாதம் 3 லட்சம் வரை சம்பாதித்து வருகிறாராம். அப்படி அவர் என்ன செய்கிறார் என்பதுதான் ஆச்சரியம். குஜராத்தில் வசித்து வரும் தீரன் சோலாங்கி 8 மாதங்களுக்கு முன்பு கழுதை வளர்க்கும் தொழிலை செய்து வந்தார்.

   

தற்போது இதன் மூலம் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். தனது சொந்த கிராமத்தில் 8 மாதத்திற்கு முன்பு 22 லட்சத்தில் 20 கழுதைகளை வாங்கி வளர்க்கத் தொடங்கி இருக்கின்றார். சுமார் ஐந்து மாதம் ஆகியும் இவருக்கு எந்த வருமானமும் இல்லை. இருப்பினும் சோர்ந்து போகாத இவர் கர்நாடகா மற்றும் கேரளாவில் கழுதை பாலின் தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்தார்.

அழகு சாதன பொருட்களுக்கு கழுதை பால் அதிக அளவில் தேவைப்படுகின்றது என்பதை உணர்ந்த இவர் ஆன்லைனில் கழுதை பாலை விற்கத் தொடங்கினார். ஒரு லிட்டருக்கு 5000 முதல் 7000 வரை என நிர்ணயித்து விற்பனை செய்தார். அது மட்டும் இல்லாமல் கழுதை பால் பால் பவுடர் ஒரு கிலோவின் விலை ஒரு லட்சம் வரை விற்றதாம். தற்போது அவரிடம் 42 கழுதைகள் உள்ள நிலையில் மாதம் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறாராம் தீரன்.

 

author avatar
Mahalakshmi