ஒரு புடவை கட்ட இரண்டு லட்சம் நீங்கள் செலவு செய்வீர்களா ? பல பணக்காரர்கள் செய்வார்கள், ஏன் இப்போது பல கல்யாண பெண்களும் திருமணத்தன்று அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக செலவு செய்கிறார்கள். அப்படி ஒரு புடவை கட்ட 35,000 முதல் 2 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார் ” Saree Drapist” டாலி ஜெயின்.

Dolly jain with deepika padukone
அம்பானி மருமகள்கள் ஆரம்பித்து, கத்ரினா கைப், ஆலியா பேட், நயன்தாரா என பல பிரபலங்களுக்கு திருமணத்திற்கு புடவை காட்டியுள்ளார் இந்த டாலி ஜெயின். அதுமட்டுமல்ல நாம் பார்க்கும் புடவை விளம்பரங்கள், மாடல்கள், ஹிந்தி சினிமாவில் நடிகைகள் புடவை கட்டி வருவது இது எல்லாமே டாலியின் கைவண்ணம் தான்.

Saree drapist dolly jain
தன்னுடைய டீன் பருவத்தில் புடவையை வெறுத்தவர் தான் இந்த டாலி, ஆனால் ஓவர் திருமணம் ஆகி சென்ற புகுந்த வீட்டிலோ தினமும் புடவை காட்டும் பாரம்பரியம் கொண்டது. தினமும் புடவை கட்டவே இவருக்கு 45 நிமிடங்கள் ஆகுமாம். ஆனால் நாட்கள் ஓட ஓட டாலிக்கு புடவைகள் மீது காதல் வந்தது. புடவைகளை அதிகம் விரும்பி அணிய தொடங்கினார்.

Dolly jain
அப்போது தான் இவருக்கு ஒரு விஷயம் புரிய தொடங்கியது, இன்றைய பெண்கள் புடவையை அணிய வெறுக்கிறார்கள் என்று. நாம் ஏன் இதனை ஒரு ப்ரபஷனாக எடுக்க கூடாது என எண்ணி இதை ஆரம்பித்தார். என்பது ஒரு காலை மட்டுமல்ல அதிக டிமாண்ட் உடைய ஒரு துறையும் ஆகும். மாடல்களுக்கு கட்ட துவங்கிய டாலி, ஹிந்தி சினிமாவில் ஹீரோயின்களுக்கும் கட்ட துவங்கினார். 325 வகையாக இவருக்கு புடவை கட்ட தெரிந்ததும், வெறும் 5 நிமிடங்களில் எப்பேர்ப்பட்ட புடவையையும் கட்டுவந்தும் தான் இவரின் வெற்றிக்கு காரணம்.

Celebrity saree drapist dolly jain
ஹீரோயின்களுக்கு புடவை கட்ட ஆரம்பித்த உடனே இவருக்கு பல பிரபலங்களின் திருமணத்திற்கு புடவை காட்டும் வாய்ப்பும் அமைந்தது. ஆலியா பட், கத்ரினா கைப், நயன்தாரா என தொடங்கி, அம்பானி மருமகள் ஷ்லோகா, மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகோயோருக்கும் இவர் முக்கியமான நாட்களில் புடவை காட்டியுள்ளார். 35,000 ல் தொடங்கி 2 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார் டாலி ஜெயின். இபப்டி ஒரு வேலைக்கு அதற்கு இவ்வளவு சம்பளமா என பலர் வாயடைத்து போயுள்ளனர்.
