பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர்கள் கௌதம் வாசுதேவன் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு காக்க காக்க, பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார். சித்தி, அலைகள் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் நடிகர் டேனியல் பாலாஜி பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, டேனியல் ஒரு செயின் ஸ்மோக்கர்.
அவர் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை புகைப்பிடிப்பார். சமீபத்தில் உயிரிழந்த காமெடி நடிகர் சேஷுவும் அப்படிதான். அவரும் புகை பழக்கத்திற்கு அடிமையானார். அதேபோல டேனியலும் அடிக்கடி புகை பிடிப்பதால் தான் இறந்துவிட்டார் என குண்டை தூக்கி போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.