காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் சரண்யா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். துறுதுறுப்பான பேச்சும், அற்புதமான நடிப்பும் கொண்ட சரண்யா அதன்பின் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. தைராய்ட் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சரண்யா சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Actress Saranya
இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என பார்த்தால், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடன் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இறந்தபின், சரண்யா கஷ்டப்பட்டு முன்னேறி இன்று டப்பிங் ஸ்டுடியோ வைத்துள்ளார். இப்போது மீண்டும் பிசியாக மாறியிருக்கும் சரண்யா அவர் வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, என் வாழ்ககை பல கஷ்டங்களை கொண்டது, போன வருடம் சாப்பாடுக்கு கூட கஷ்டப்பட்டு வந்தேன், ஆனால் இன்று மக்களுக்கு அன்னதானம் வழங்குகிறேன், சொந்தமாக டப்பிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். ஆனால் இவை ஈசியாக அமைந்து விடவில்லை. பல வருட கஷ்ட வாழ்க்கைக்கு கிடைத்த பலன். சரண்யாவை ஒரு நடிகையாக மற்றவர்களுக்கு தெரியும், ஆனால் சரண்யாவை யாருக்கும் தெரியாது.

Actress saranya shares about her life
எனக்கென ஒரு குடும்பம் இல்லை, என் அப்பா இறந்துவிட்டார் என் அப்பா மறைவுக்கு பின் என் அம்மா அவங்களுக்கு என ஒரு வாழ்க்கையை அமைத்து கொண்டார். என்னை அவர் கவனிக்கவில்லை, என்னை அப்படியே விட்டு சென்று விட்டார். சொந்தக்காரர்கள் யாரும் என்மேல் ஒரு அக்கறை காட்டியது கூட இல்லை. என்னை யாரும் அவர்கள் வீட்டிற்கு அனுமதிக்க கூட மாட்டார்கள்.
அவ்வளவு கஷ்டப்பட்டேன், ஆனால் இன்று கடவுள் என்னுடன் இருக்கிறார். நான் முருகனின் பக்தை, என் வாழ்க்கை இன்று நலமாக இருக்கிறது, நான் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் எனக்கு அணைத்து செல்வங்களையும் தந்துள்ளார். நான் கஷ்டப்பட்ட போது என்னை அரவணைத்து இறைவன் மட்டுமே என கண்ணீர் மல்க பேசியுள்ளார் சரண்யா.