விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ் , செப் தாமு இருந்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா, வி டிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, பிரியங்கா தேஷ் பாண்டே, பூஜா, யூட்யூபர் இர்பான் என பல மக்களின் பேவரைட் போட்டியாளர்கள் இந்த சீசனில் களமிறங்கியுள்ளனர்.
இர்பான் நிறைய உணவகங்களுக்கு சென்று அங்கு சமைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு மக்களுக்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். இவரால் சந்து பொந்துகளில் இருக்கும் கையேந்தி பவன்கள் கூட ஃபேமஸ் ஆனது. அது மட்டும் இல்லாமல் நட்சத்திரங்களுக்கு சமைத்து கொடுத்து அவர்களை பேட்டி எடுப்பதும் வழக்கம். அது மட்டும் இல்லாமல் சில நேரங்களில் குடும்பத்தோடு சமைத்து அதை வீடியோவாகவும் போடுவார்.
இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. ஆலியா என்பவரை திருமணம் செய்துகொண்ட இர்ஃபான், திருமணத்துக்கு பின்னர் தன் மனைவியுடன் சேர்ந்து பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று வெளியிட்டு யூடியூப் வீடியோ இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் அவர் தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்து இருக்கிறார். இர்ஃபானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை ஒரு பார்ட்டி வைத்து கூறியுள்ளார். இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அது என்ன குழந்தை என்பதை வெளியிடுவது சட்டப்படி குற்றம். ஆனால் தற்போது இர்ஃபான் துபாய்க்கு குடும்பத்துடன் சென்று, அங்கு ஸ்கேன் செய்து தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
https://www.youtube.com/watch?v=_kxY8mvrGZY