மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெனாலி, பஞ்ச தந்திரம், துப்பாக்கி உள்ளிட்ட சில திரைப்படங்களி நடித்துள்ளார் ஜெயராம். மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம்.

#image_title
நடிகர் ஜெயராம் பார்வதி என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார். ஜெயராம் – பார்வதி தம்பதிக்கு காளிதாஸ் என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளார்கள். காளிதாஸ் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் நடித்தும் வருகிறார். குறிப்பாக பாவ கதைகள், விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஜெயராமின் மகனான காளிதாஸ்.
மேலும், ஜெயராமின் மகள் மாளவிகா நவனீத் கிரீஷ் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார், இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இந்த ஜோடிக்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சியதார்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவில் இந்த ஜோடிக்கு (மாளவிகா – நவனீத் கிரீஷ்) இருவீட்டார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவைரலாகி வருகிறது.
View this post on Instagram