பிக் பாஸுக்கு போனது வீண் போகல… வினுஷாக்கு அடித்த ஜாக்பாட்… ஹேப்பி மூடில் கண்ணம்மா…

By Begam on சித்திரை 26, 2024

Spread the love

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 1. ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைக்களமாக அமைத்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Actress Vinusha

   

இந்த சீரியலில் கண்ணம்மா என்ற லீடு ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரோஷ்னி ஹரிபிரியன்.  நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலக,  அவருக்கு பதிலாக மாடலிங் பெண்ணான வினுஷா தேவியை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர் சீரியல் குழுவினர்.

   

 

இவரை முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ஏற்க மறுத்த ரசிகர்கள் பிறகு அவரின் நடிப்பை பார்த்து வியந்து அவரை ஏற்று கொண்டனர். முதல் சீசன் நிறைவடைந்து இரண்டாவது சீசன் ஓளிபரப்பாகி நிறைவடைந்தது. இந்த சீசனிலும் கண்ணம்மாவாக வினுஷா தேவியே நடித்தார். ஹீரோவாக சிப்பு சூரியன் நடித்தார்.  இந்த தொடரும் முடிவடைந்தது.

அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக வினுஷா சென்ற நிலையில் அதிலும் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் நான்காவது வாரமே வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வினுஷா மீண்டும் ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் டிவி புதிதாக தொடங்க இருக்கும் ‘பனிவிழும் மலர்வனம்’ என்ற சீரியலில் நடிக்கிறார் என்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ…