வேஸ்ட் பொருட்களால் உருவான கலை சிற்பம்.. தாஜ்மஹாலுக்கு அடுத்து மக்கள் அதிகம் பார்த்த இடம்.. எங்க இருக்கு தெரியுமா?

By Mahalakshmi

Published on:

உலகம் எங்கிலும் பல பாரம்பரியம் நிறைந்த கலாச்சாரம் மற்றும் இயற்கை சூழல் நிறைந்த சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட ஒரு சுற்றுலா தளம் என்றால் அது தாஜ்மஹால் தான். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.

wdd

32 மில்லியன் ரூபாய் செலவில் 1632 ஆம் ஆண்டு முதல் 1653 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக இருக்கின்றது. ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்-காக கட்டப்பட்ட ஒரு காதல் நினைவு சின்னம். இதனை பார்ப்பதற்கு பல மக்கள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த தாஜ்மஹால் இருந்து வருகின்றது தாஜ்மஹாலை அடுத்து மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஒரு இடத்தைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

   

வடமேற்கு இந்தியாவில் சிவாலிக் மலையடிவாரத்தில் சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்திருக்கின்றது. இந்தப் பகுதியில் நீட் சந்த் என்பவரால் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு அழகான கலை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின்கம்பிகள், பழைய வாகன உதிரி பாகங்கள், பழைய மின்விளக்குகள் மற்றும் சாதாரண பொருள்களான முள்கரண்டி, களிமண் குண்டுகள், கட்டிடக்கழிவுகள் மண்பானைகள் போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

மனித உருவங்கள், கட்டிடங்கள், மிருக உருவங்கள் என பல தோற்றங்களில் இந்த கலை படைப்புகள் காட்சியளிக்கின்றன. இதனை பிரெஞ்சு அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. தாஜ்மஹாலுக்கு அடுத்து மக்கள் அதிக அளவில் சுற்றி பார்க்கும் இடம் என்றால் அது இந்த சண்டிகர் ரா கார்டன் தான்.

author avatar
Mahalakshmi