நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் மூழ்கடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். யாரோ ஒருவர் அதனை பதிவு செய்து வெளியிட அது காட்டுத்தீ போல பரவி விடும், என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது ஏறி அதில் இருக்கும் Red Bull நிறுவனத்தின் பானங்களை திருடுகிறார்கள். இரவு நேரம் என்பதால் இதனை ஓட்டுனரும் சரியாக கவனிக்கவில்லை. பின்னல் காரில் வந்த நபர்கள் தான் இதனை தங்களது செல் போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவம் சினிமாவில் தான் நடக்கும், எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் நெடுஞ்சாலை என்ற படத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும், இதனை மையப்படுத்தி தான் கதையும் இருக்கும், அதேபோல தான் இங்கு ஒரு கும்பல் இதனை நிஜத்தில் செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்று கமெண்ட்ஸ்களில் நெட்டிசன்கள் தாங்காது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram