கையும் களவுமாக சிக்கிய ஜீவா…!பணத்தை ஆட்டைய போட திட்டம் போட்ட ரோகினி…!பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை…!

By Mahalakshmi on ஏப்ரல் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.அதிலும் முத்து மீனாவுக்காக இந்த சீரியலை பலரும் ரசித்துப் பார்த்து வருகிறார்கள்.விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் புது ப்ரொமோ இன்று வெளியாகி உள்ளது.

   

ரோகிணியும் மனோஜும் பணத்தை திருடி சென்ற ஜீவாவை முத்து பார்லருக்கு அழைத்து செல்வதாக கூறி ரோகினி பார்லருக்கு கொண்டு செல்கிறார்.அங்கு அவரைப் பார்த்து ஷாக்காண ரோகினி உடனே மனோஜ்க்கு போன் செய்து அந்த ஜீவாவை நான் பார்த்துவிட்டேன் உடனே வா என்று கூற அவரும் வந்து விடுகிறார்.

   

 

இதைத் தொடர்ந்து மனோஜ் ஜீவாவை பார்த்து மரியாதையாக என்னிடம் பறித்து சென்ற பணத்தை திருப்பிக் கொடு என வாக்குவாதம் விடுகிறார்.அந்த சமயத்தில் போலீஸ் வந்து விடுகின்றது.அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.அவரிடம் அனைத்து தகவலையும் கூறுகிறார் மனோஜ்.

மேலும் அவரை கைது பண்ணி ஜெயிலில் போட்டு தனது பணத்தை எப்படியாவது திருப்பி வாங்கி கொடுங்கள் என்று சண்டையிட்டு வருகிறார்.இதற்கு இடையில் மீனாவின் வாகனம் நோ பார்க்கிங்கில் இருந்ததால் அதனை காவல்துறையினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்து விடுகிறார்கள்.

பின்னர் மீனா முத்துவுக்கு போன் செய்து காவல் நிலையத்திற்கு வர சொல்கிறார்கள்.இதுக்கடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது மிகவும் ஆர்வமாக இருக்கின்றது.