உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

By Arun on மே 3, 2024

Spread the love

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது அவமானத்துக்கோ உள்ளாக்குகிறோம். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக, ஒரு பெண் கருப்பாக இருந்தால் அவ்வளவுதான்! “உனக்கு எப்படி கல்யாணம் ஆகும். எந்த பையனும் உன்னைய விரும்பமாட்டான்” என்று அந்த பெண்ணின் மனதை புண்படுத்துவார்கள்.

இவ்வாறு தனது நிறத்தைக் கொண்டு அவமானப்படுத்தப்பட்ட ஒரு மாணவி, அந்த நிறத்தை வைத்தே தன்னுடைய தகுதியை வளர்த்துக்கொண்டு தற்போது ஒரு தொழில்முனைவோராக ஆகியுள்ளார். அதுவும் மாதம் மாதம் அவரது நிறுவனம் லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறது.

   

   

வேலூரைச் சேர்ந்த யாமினி என்ற இளம்பெண் தனது சக தோழியுடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம்தான் ஐஸ்வர்யம் குட்நெஸ். மிகவும் பயனுள்ள வகையிலும் எந்த வித Side Effect-ம் இல்லாத வகையிலும் பல Skin Care சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

 

பள்ளி மற்றும் கல்லூரி காலகட்டத்தில் யாமினியை அவரது தோல் நிறத்திற்காக பலரும் கிண்டலடித்திருக்கிறார்கள். இதனால் மனம் நொந்துப்போன அவருக்கு அவரது தந்தை உறுதுணையாக இருந்து அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார். “யார் வேணாலும் உன்னைய கிண்டல் பண்ணலாம். ஆனால் நீ நீயாகவே இரு. உன்னையே நீ நேசி” என்று யாமினிக்கு தைரியம் ஊட்டியுள்ளார்.

யாமினி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மது என்கிற சக மாணவியுடன் இணைந்து நம்மை போன்ற பெண்களுக்கு ஏற்றவாறு Skin Care பிராடக்டுகளை தயாரிக்கலாம் என்று திட்டமிட்டார். வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் பல சோப்புகளை தயாரித்து முதலில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரு ஸ்டால் வைத்தனர்.

ஒருத்தராவது நமது பிராடெக்ட்டை வாங்குவாரா? என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அந்த கல்லூரி மாணவிகள் பலரும் அவர்களின் பிராட்கெடுகளை வாங்கி அவர்களை ஊக்கிவித்தனர். அந்த நாளே அனைத்து சோப்புகளும் விற்றுத் தீர்ந்தன. அதன் பின் அவர்களின் சோப் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகளிடம் இருந்து நன்மதிப்புகள் வரத்தொடங்கின.

அதற்கு பின் அவர்களின் பிசினஸ் ஏறுமுகமாக இருந்தது. ரூ.5000 முதலீட்டில் தொடங்கப்பட்ட ஐஸ்வர்யம் குட்நெஸ் தற்போது லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறது. இரண்டு கல்லூரி மாணவிகள் இணைந்து தொடங்கிய இந்த நிறுவனம் பற்பல Skin Care பிராடெக்ட்டுகளுடன் தற்போது மார்க்கெட்டில் கலக்கி வருகிறது.