பேபி ஷாமிலி என்று பெயரை கேட்டாலே போதும் யாருக்கும் அறிமுகம் தேவையில்லை. 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த ஷாமிலி பிரபல நடிகை ஷாமிலியின் தங்கை ஆவார். இயக்குனர் மணிரத்தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி. ராஜநடை படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலமாக பெரும் புகழையும் பெற்றார்.
மற்ற மொழி படங்களிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்திருக்கின்றார். இருப்பினும் அஞ்சலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது. அந்த திரைப்படத்திற்காக தனது 3-வது வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். அதனை தொடர்ந்து தமிழில் துர்கா, தேவர் வீட்டு பொண்ணு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக மம்முட்டி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தொடர்ந்து படிப்பு மீது கவனம் செலுத்தி வந்த இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பதற்காக சிங்கப்பூர் சென்று விட்டார். படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த ஷாமினி திரைப்படத்தில் தமிழில் வெளியான வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து இவர் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க பெயிண்டிங்கில் ஆர்வம் செலுத்த தொடங்கி விட்டார். நடிகை ஷாமிலி மிகச் சிறந்த முறையில் ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் தான் வரைந்த புகைப்படங்களை ஆர்ட் கேலரியாக மக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்.
இதனை காண்பதற்கு ஏராளமான பிரபலங்கள் வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை ஷாமிலி தற்போது வரைந்திருக்கும் ஓவியங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
View this post on Instagram