தளபதியின் கடைசி திரைப்படத்தை தயாரிக்க போது இந்த நிறுவனம் தானா..? விரைவில் வெளியாக போகும் அறிவிப்பு..!

By Mahalakshmi on வைகாசி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வரும் இவரின் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெரும். 200 கோடி வரை ஒரு திரைப்படத்திற்கு சம்பளத்தை வாங்கி வருகிறார் நடிகர் விஜய். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.

   

இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஓரிரு வாரங்களில் முழுமையாக படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகின்றது.

   

 

தற்போது ஓடிடி. தொலைக்காட்சி உரிமை என வியாபாரம் கல்லா கட்டத் தொடங்கி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக நிலையில் இப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்குகின்றார் என்று கூறப்பட்டது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால் இப்படம் தொடர்பான எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

பொதுவாக நடிகர் விஜய் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் வந்துவிடும். ஆனால் தற்போது வரை தளபதி 69 திரைப்படத்திற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில் தளபதி 69 திரைப்படத்தை கேபிஎன் புரொடக்சன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகின்றது.

இந்நிலையில் விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை முடித்துக் கொண்டு நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க இருக்கின்றார். ஒரு பக்கம் நடிகர் விஜய்யை திரையில் காண முடியாது என்று ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பார் என்று உற்சாகத்திலும் விஜய் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.