Connect with us

CINEMA

மாற்றம் சேவை மூலம் அடுத்த நபரை தேடி பயணம்.. அன்பால் ராகவா லாரன்ஸை மகிழ வைத்த மக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன. அவர்களுக்கு மத்தியில் குறைந்த தொகை சம்பளம் பெற்றாலும், அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ராகவா லாரன்ஸ்.

   

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு ஹீரோவாக கலக்கிறார். தற்போது இயக்குனராகவும் அசத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், அனைவருக்கும் கல்வி அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். தற்போது மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கின்றார்.

இதில் அவர் வளர்த்த இளைஞர்கள் பலரும் இணைந்து முடியாதவர்களுக்கு உதவி செய்ய ரெடியாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதை பார்த்த பிரபலங்களான எஸ்ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா அனைவரும் இணைந்து இருக்கின்றனர். இந்த மாற்றம் அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் பத்து ஊர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முதல் டிராக்டர் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மோட்சகுளம் பகுதிக்கு சென்றிருந்த ராகவா லாரன்ஸ் அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு, கிராம மக்களுக்கு இருகரம் குப்பி மரியாதை செலுத்தி இருந்தார்.

மேலும் டிராக்டர் மேல் ஏறி அமர்ந்து சாவி போட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி பின்னர் மாற்றுத்திறனாளி பிரபு என்பவரிடம் சாவியை ஒப்படைத்தார். இங்கு உள்ள விவசாயம் செய்யும் மக்கள் அனைவரும் இந்த டிராக்டரை இலவசமாக பிரபுவிடம் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறியிருந்தார். அவர் அப்பகுதிக்குச் சென்று எடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top