லால் சலாம் படத்திற்கு பிறகு வந்து குவியும் பட வாய்ப்புகள்.. இனி விக்ராந்த் காட்டுல அடமழதா..

By Ranjith Kumar

Published on:

தமிழக நாயகன் தளபதி விஜய் அவர்களின் தம்பி விக்ராந்த் அவர்கள் முதன் முதலில் கே.பாலசந்தரின் அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார், ஆர்.வி.உதயகுமாரின் கற்க கசடற படத்தில் நாயகனாக அறிமுகமானார். அப்பிடத்தில் தான் லட்சுமி ராய் அறிமுகமானார்

   

அதன் பிறகு விக்ராந்த் பல படங்களில் ஹீரோவாகவும், துணை ஹீரோவாகவும் நடித்தார். அந்த வரிசையில் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக பாண்டியநாடு போன்ற படங்கள் முக்கியமானவை. சுட்டுப் பிடிக்க உத்தரவு, வெண்ணிலா கபடிக்குழு 2, பக்ரீத் என 2019 இல் விக்ராந்தின் கரியர் பிஸியானது. எனினும் அடுத்தடுத்துப் படங்கள் அமையவில்லை. ஹீரோவா நடிச்சா தான் வாய்ப்பில்லை என்று புதுசா வில்லனா இறங்கலாம்னு சொல்லி ட்ரை பண்ண படம் தான், உதயநிதி ஸ்டாலின் நடித்த வெளியான கெத்து படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார், இவருக்கு அந்த அந்தப் புது எக்ஸ்பிரிமெட்டும் கை கொடுக்கவில்லை.

சினிமால நமக்கு தான் வாய்ப்பு இல்லை என்று சினிமா விட்டு விலகலாம் நினைக்கிற டைம்ல தான் அவருக்கு கை கொடுத்த படம் லால் சலாம். ரஜினி நடித்திருப்பதால் லால் சலாம் தனக்கு கரியர் பூஸ்டராக அமையும் என விக்ராந்த் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.அருள்நிதி நடித்த டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன்

விக்ராந்த் நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விக்ராந்தே கூறியுள்ளார். டைரி 2 படத்தில் அருள்நிதியுடன் விக்ராந்தும் நடிக்கிறாரா இல்லை, விக்ராந்த் தனி நாயகனாக நடிக்கும் புதிய படமா என்பதை இன்னும் இன்னாசி பாண்டியன் தெளிவுப்படுத்தவில்லை.சினிமா தன்னை கை கைவிட்டு விட்டது என்று நினைத்த விக்ராந்த் அவர்களுக்கு இன்னாசி பாண்டியனின் படம் கரியர் மாற்றமாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

author avatar
Ranjith Kumar