“உனக்காக ஒரு கிப்ட் வச்சிருக்கேன்”… காதலனோடு ஹோட்டலில் இருந்த இளம்பெண்… நள்ளிரவில் வந்த வீடியோ கால்… ஹைதராபாத்தில் பதறவைக்கும் பின்னணி…!

Spread the love

ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘வி கிராண்ட்’ ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா என்ற பெண் வியாழக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலாராம் பகுதியைச் சேர்ந்தவரான ரேணுகா, குக்கட்பள்ளியில் உள்ள ஒரு கிளப்பில் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஏழு வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகத் தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, ரேணுகாவிற்கும் கோல்கொண்டா பகுதியைச் சேர்ந்த ஃபாரூக் என்பவருக்கும் இடையே ஒரு மதுபான விடுதியில் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று (ஜூன் 3) மாலை இருவரும் அந்த ஹோட்டல் அறையில் ஒன்றாகத் தங்கியுள்ளனர். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு, ஃபாரூக் வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஃபாரூக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அறையில் தனியாக இருந்த ரேணுகா, நள்ளிரவு 12:30 மணியளவில் தனது தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, அடுத்த நாள் தனது பிறந்தநாள் என்று கூறியவர், “உனக்காக ஒரு பிறந்தநாள் பரிசு வைத்ததுள்ளேன்” என்று கூறிவிட்டு, திடீரென ஹோட்டல் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள லங்கர் ஹவுஸ் போலீசார், காதலன் ஃபாரூக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேணுகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஷாக்.. இனிமே டெலிகிராமில் படம் டவுன்லோடு பண்ண முடியாது…! ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு… சினிமா ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…!!

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…

8 minutes ago

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

15 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

23 minutes ago

நாடே அதிர்ச்சி… பள்ளிக்குள்ளேயே கதறிய 13 வயது சிறுமி… 5 சிறுவர்கள் செய்த காரியம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…

23 minutes ago

BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்… சற்றுமுன் பரபரப்பு…!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…

24 minutes ago

“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…

34 minutes ago