மருமகனின் ரகசிய போன் கால்.. பாத்ரூம் கதவை உடைத்த கள்ளக்காதலன்… 10 வயது மகனின் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… மதுரையில் சினிமா பாணியில் நடந்த பழிவாங்கல்….!

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி விஜயபாரதி கடந்த சில ஆண்டுகளாக இவரை பிரிந்து தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அறிவரசனின் கொழுந்தியா சிவரஞ்சனிக்கு திருமணமாகி கணவருடன் கோயம்புத்தூரில் வசித்து வந்துள்ளார். ஆனால், சிவரஞ்சனி வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அறிவரசனுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அறிவரசன், சிவரஞ்சனியை தொலைபேசியில் அழைத்து, தவறான பாதையில் செல்லாமல் கணவருடன் ஒழுங்காக வாழுமாறு கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.

இந்த கண்டிப்பால் கடுமையான கோபமடைந்த சிவரஞ்சனி, தன் கள்ளக்காதலனான சௌந்தர் என்பவரிடம் இதுகுறித்து கூறி புலம்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர், அறிவரசனை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, நேற்று மாலை 5 மணி அளவில் ஒரு கருப்பு நிற பொலிரோ காரில் ஆயுதங்களுடன் மூன்று நபர்களை கூட்டிக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள அறிவரசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அச்சமயம் வீட்டில் அறிவரசனின் சிறு வயது மகன் மட்டுமே இருந்துள்ளான். சௌந்தர் அந்த சிறுவனிடம், “உங்க அப்பா எங்கேடா?” என்று மிரட்டலாகக் கேட்க, பயந்துபோன அந்த சிறுவன், “அப்பா பாத்ரூம் போயிருக்காங்க” என்று கூறியுள்ளான்.

உடனடியாக அந்த கும்பல் பாத்ரூம் கதவை அதிரடியாக உடைத்து, உள்ளே இருந்த அறிவரசனை வெளியே இழுத்து தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் அறிவரசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். தந்தையை வெட்டுவதைக் கண்டு அலறிய சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கவனித்த சௌந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் உடனடியாக காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அறிவரசனை மீட்ட உறவினர்கள், அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சித்ரகலா வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கள்ளக்காதலன் சௌந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறார்.

Nanthini

Recent Posts

ஷாக்.. இனிமே டெலிகிராமில் படம் டவுன்லோடு பண்ண முடியாது…! ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு… சினிமா ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…!!

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…

6 minutes ago

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

13 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

21 minutes ago

நாடே அதிர்ச்சி… பள்ளிக்குள்ளேயே கதறிய 13 வயது சிறுமி… 5 சிறுவர்கள் செய்த காரியம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…

22 minutes ago

BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்… சற்றுமுன் பரபரப்பு…!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…

22 minutes ago

“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…

32 minutes ago